Thursday, July 24, 2014

On Thursday, July 24, 2014 by Anonymous in    
காரைக்குடி டாக்டர் உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரியில் போக்குவரத்து காவல்துறை மற்றும் மதுரை டிரைவிங் நீட்ஸ் அகாதெமி ஆகியவை சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாம் தொடக்க விழாவில் காரைக்குடி டி.எஸ்.பி முருகேஷ் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ஹேமாமாலினி தலைமை வகித்தார். மதுரை டிரைவிங் நீட்ஸ் அகாதெமியின் நிறுவனர் ஏ. நரசிம்மன் சாலை விபத்து நடப்பதற்கான காரணம், அதனை தவிர்ப்பது குறித்தும், தற்காப்புடன் வாகனங்களை செலுத்துவது குறித்தும் விடியோ படக்காட்சியுடன் மாணவிகளுக்கு விளக்கினார்.
காரைக்குடி போக்குவத்து காவல் ஆய்வாளர் பி. ரெத்தினம், சார்பு ஆய்வாளர் ஏ. வில்லியம் பெஞ்சமின், சாலைப் பாதுகாப்புப்படை ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்மணி மாறன் ஆகியோர் பேசினர்.
முடிவில் விபத்து என்னால் ஏற்படாது என்றும் எந்த விபத்திற்கும் நான் காரணமாக இருக்கமாட்டேன் என்றும் அனைத்து மாணவிகளும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை காரைக்குடி போக்குவரத்து காவல்துறையினர் செய்திருந்தனர்.

0 comments: