Thursday, July 24, 2014

On Thursday, July 24, 2014 by Anonymous in    
போடி அருகே, விவசாய நிலங்களில் மதுரை வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செயல்முறை விளக்க ஆய்வு மேற்கொண்டனர்.
வேளாண்மைக் கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் கிராமப்புற வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் கிராமங்களில் தங்கி விவசாயம் குறித்த செயல்முறை விளக்கம் பெற வேண்டும். இத்திட்டத்தின் கீழ் மதுரை வேளாண் கல்லூரியில் பயிலும் மாணவிகள் ஹேமாவதி, இத்திஸ்ரீ, கலைவாணி, கலாமணி, கார்த்திகா, கார்த்திகேயணி, மீனா, மீனாபிரியா ஆகிய மாணவிகள் போடி அருகே கோடாங்கிபட்டியில் செயல்முறை விளக்க ஆய்வு மேற்கொண்டனர்.
இத்திட்டத்தின் கீழ் தென்னை மரத்திற்கு டானிக் பயன்படுத்தும் முறை, மண் மாதிரி எடுக்கும் முறை, விதை நேர்த்தி செய்யும் முறை அவற்றின் முக்கியத்துவம் பற்றி செயல்விளக்கம் பெற்றனர். மேலும் விவசாயிகளுக்கும் செய்து காட்டி விளக்கினர்.
இதேபோல் கனுப்புழு பாதிப்பைத் தடுக்கும் முறைகளையும் எடுத்துக்கூறினர். விவசாயிகள் விவசாயம் செய்யும் முறைகளையும் அறிந்து குறிப்பெடுத்துக் கொண்டனர்.
மாணவிகளுக்கு போடி வேளாண்மை உதவி அலுவலர் அப்புசாமி வழிகாட்டினார். கோடாங்கிபட்டி விவசாயிகள் பங்கேற்று மாணவிகளிடம் செயல்முறை விளக்கம் பெற்றனர்.

0 comments: