Showing posts with label Theni. Show all posts
Showing posts with label Theni. Show all posts

Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
சின்னமனூர் அருகே கத்தியால் குத்தி கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்டார். பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய் துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்ட தாவது:-

கூலித்தொழிலாளி

தேனி மாவட்டம் சின்ன மனூர் அருகே உள்ள துரைச் சாமிபுரத்தை சேர்ந்த பெரிய சாமிதேவர் என்பவ ருடைய மகன் பாண்டியன் (வயது 55). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் பாண்டியனுக்கும் அதே பகுதியை சேர்ந்த காட்டு ராஜா என்பவருடைய மனைவி பாக்கியம் (45) என்ப வருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்ததாக கூறப் படுகிறது.

இந்த தொடர்பு குறித்து அறிந்ததும் பாக்கியத் தின் குடும்பத்திற்கு தெரியவந் துள்ளது. இதனால் பாக்கியத் தின் மகன் மணி, மகள் பிரேமா, மருமகன் விஜயன் (28) ஆகிய 3 பேரும் நேற்று காலை பாண்டியனின் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ள னர். 3 பேரும் சேர்ந்து பாண்டி யனை தாக்கியுள்ளனர்.

கத்தியால் குத்திக்கொலை

அப்போது விஜயன் மறைத்து வைத்து இருந்த கத்தியால் பாண்டியனின் அடிவயிற்றில் குத்தினார். தொடர்ந்து 2 பேரும் சண்டை போட்டதால் பாண்டியனும், விஜயனும் அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்துள்ள னர். இந்த நிலையில் பாண்டி யன் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த விஜயன் சின்ன மனூர் அரசு மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டு உள் ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பாண்டியனின் மகள் மலர் மணி (27) சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் மணி, பிரேமா, விஜயன், பாக்கியம் ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் மணி, பிரேமா, பாக்கி யம் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கொலை செய்யப் பட்ட பாண்டியனின் உடல் பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப் பட்டது. இந்த சம்பவம் சின்ன மனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
தேனி மாவட்டத்தில், குடிநீர் அபிவிருத்தி திட்டம் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணி களை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதிகளில் குடிநீர் தட்டுப் பாட்டை போக்கவும், எதிர் கால குடிநீர் தேவையை கருத் தில் கொண்டும் ரூ.68 கோடியே 83 லட்சம் மதிப்பில் வைகை அணையில் இருந்து குடிநீர் கொண்டு வருவதற்கு புதிய குடிநீர் அபிவிருத்தி திட்டம் தொடங்கி அதற்கான பணிகள் நடந்து வருகிறது. அதேபோன்று பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் லட்சுமி புரம், ஜெயமங்கலம் பகுதி களில் தாய் திட்டத்தின் கீழ் தார்ச்சாலைகள் அமைத் தல், குடிநீர் கிணற்றுக்கு சுற்றுச் சுவர் அமைத்தல், சிறு மின் விசை பம்பு அமைத் தல், தெருவிளக்குகள் அமைத் தல் போன்ற பணிகளும், பசுமை வீடுகள், இந்திரா நினைவு குடியிருப்புகள் கட்டும் பணி களும் நடந்து வருகின்றன.

இந்த வளர்ச்சி திட்டப் பணி களை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஏ.மீனாட்சி புரம் முதல் லட்சுமிபுரம் வரை ரூ.45 லட்சம் மதிப்பில் புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். லட்சுமி புரத்தில் குடிநீர் கிணற்றுக்கு ரூ.1½ லட்சம் மதிப்பில் சுற்றுச் சுவர் அமைக்கப்பட்டு உள்ள தையும், குடியிருப்பு விரிவாக் கம் அடைந்துள்ள பகுதிகளில் புதிதாக தெரு விளக்குகள் அமைக்கும் பணியையும் கலெக்டர் பார்வையிட் டார்.

பின்னர் லட்சுமிபுரம், ஜெய மங்கலம் பகுதிகளில் பசுமை வீடுகள், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில் கட் டப்படும் வீடுகளை பார் வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தர விட் டார். அதனை தொடர்ந்து வைகை அணை பகுதியில் நடந்து வரும் தேனி அல்லி நகரம் நகராட்சிக்கான குடிநீர் அபிவிருத்தி திட்டப் பணி களை கலெக்டர் கே.எஸ். பழனிசாமி பார்வையிட் டார்.

புதிய குடிநீர் திட்டம்

இந்த ஆய்வு குறித்து கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி கூறியதாவது:-

தேனி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார் பிலும் பல்வேறு வகையான வளர்ச்சித் திட்டப் பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேனி நகரின் குடிநீர் தேவைக்காக வைகை அணை யில் இருந்து குடிநீர் எடுக்கும் திட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. தேனி அல்லி நகரம் நகராட்சி யில் தற்போது சுமார் 95 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இந்த புதிய குடிநீர் திட்ட மானது 2045-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை பெருக்கத்தை கணக்கிட்டு, அதற்கேற்ப சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு தண்ணீர் வழங்கும் வகையில் தொடங் கப்பட்டு உள்ளது. இதற்காக தேனி நகரில் 4 இடங்களில் மேல் நிலை நீர்த்தேக்க தொட் டிகள் அமைக்கப் படு கிறது. அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் பணிகள் முடிந்து விடும்.

இவ்வாறு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித் தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் முருகேசன், ஊரக வளர்ச் சித்துறை செயற்பொறியாளர் சங்கரஜோதி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாலசுப்பிரமணியன், தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணை யாளர் (பொறுப்பு) ராஜாராம், பெரியகுளம் வட் டார வளர்ச்சி அலுவலர்கள் நாகரத்தினம், ஜீவரத்தினம் மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

On Thursday, September 18, 2014 by farook press in ,    
தேவாரம் அருகே நியூட் ரினோ ஆய்வு மையத்திற்கு சாலை அமைக்கும் பணியை பொறியாளர் குழுவினர் ஆய்வு செய்தனர்.

நியூட்ரினோ ஆய்வு மையம்

தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிப்புரம் ஊராட்சி பகுதியான அம்பரப் பர் மலையில் சுமார் ரூ.15 கோடி மதிப்பீட்டில் நியூட் ரினோ ஆய்வு மையம் அமைய உள்ளது. இதில் முதல்கட்ட பணியாக ஆய்வு மையம் அமைய உள்ள இடத்தில் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள் ளது. சுமார் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தேக்க ராட்சத தண்ணீர் தொட்டி அமைத்துள் ளனர். போடி அருகே உள்ள ராசிங்காபுரத்தில் இருந்து நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய உள்ள அம்பரப்பர் மலை வரை சுமார் 9 கிலோ மீட்டர் தூரத்தில் 12 மீட்டர் அகலம் கொண்ட தார்சாலை அமைக்கப்பட உள்ளது.

இதற்காக சுமார் ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. முதல் கட்டமாக 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நியூட்ரினோ ஆய்வு கூடத்தில் இருந்து பொட்டிப்புரம் ஊராட்சி பகுதியான தே.புதுக் கோட்டை வரை தற்போது ரூ.6 கோடியே 30 லட்சம் செலவில் சாலை அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. இதில் போக்குவரத்திற்கு வசதி யாக பாலம் ஒன்று கட்ட ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. பாலம் அமைய உள்ள இடத்தில் இடையூறான மரங்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நடந்து வருகிறது.

பொறியாளர் குழு ஆய்வு

நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய உள்ள இடத்தை மும்பை ‘டாடாபண்ட மண்டல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்’ தலைமை செயற்பொறியாளர் ரங்கன் தலைமையில் பொறி யாளர்கள் குழுவினர் மற்றும் அறிவியல் ஆய்வு மைய மாண வர்கள் ஆய்வு பணி மேற் கொண்டனர். சாலை அமைக்கும் பணியை போடி மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் பிர சன்னா தலைமையில் அதிகாரி கள் குழுவினர் பார்வை யிட்டனர்.

இதுகுறித்து நியூட்ரினோ ஆய்வுமைய விஞ்ஞானிகள் கூறுகையில், ‘கண்ணுக்கே தெரியாமல் பிரபஞ்சத்தில் இருந்தும் பூமியில் இருந்தும் வெளியாக கூடிய நியூட்ரினோ துகள்களை ஆராய்ச்சி செய்ய அம்பரப்பர் மலையை சுமார் 2 கிலோமீட்டரில் குடைந்து இதற்குள் ஆய்வகம் அமைக்கப் பட உள்ளது. சக்தி வாய்ந்த சுமார் 50 டன்எடையுள்ள காந்தம் நிறுவப்பட உள்ளது. சாலை அமைக்கப்பட்ட பின்பு தான் பாறையை குடை வதற்கான எந்திரங்கள் அனைத்தையும் கொண்டு வர முடியும். எனவே சாலை அமைக்கும் பணி தீவிரப்படுத் தப்பட்டுள்ளது’ என்றனர்.

Wednesday, September 17, 2014

On Wednesday, September 17, 2014 by farook press in ,    
தேனி மாவட்டத்தில் போலீஸ் துறை சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு விசாரணை முகாமில் ஒரே நாளில் 323 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

சிறப்பு விசாரணை முகாம்

தேனி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் நிலு வையில் இருக்கும் மனுக்களை சிறப்பு முகாம்கள் நடத்தி தீர்வு காண மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் உத்தர விட்டார். அவருடைய உத்தர வின் பேரில் தேனி, போடி, சின்னமனூர், உத்தம பாளை யம், ஆண்டிப்பட்டி, கட மலைக்குண்டு, பெரியகுளம் ஆகிய 7 இடங்களில் சிறப்பு மனு விசாரணை முகாம் நேற்று நடத்தப்பட்டது.

இந்த முகாமிற்கு அந்தந்த பகுதி போலீஸ் துணை சூப்பி ரண்டுகள் தலைமை தாங்கி னர். தேனியில் நடந்த முகாமில் போலீஸ் இன்ஸ் பெக்டர்கள் முத்துக்குமார், வெங்கடாசல பதி, சப்-இன்ஸ்பெக்டர் உதய குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். போலீஸ் நிலையம் வாரியாக தனித்தனி குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு மனுக்கள் மீது விசாரணை நடத்தி தீர்வு காணப்பட்டன. இதில் 130 மனுக்கள் விசா ரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டு, 115 மனுக்கள் தீர்வு காணப்பட்டன.

323 மனுக்கள் தீர்வு

அதேபோன்று போடி, சின்னமனூர் பகுதிகளில் 79 மனுக்கள் விசாரணை நடத்தப் பட்டது. அதில் 54 மனுக்கள் தீர்வு காணப்பட்டன. உத்தம பாளையத்தில் 87 மனுக்கள் மீது விசாரணை நடத்தி, 67 மனுக்கள் தீர்வு காணப்பட்டன. ஆண்டிப்பட்டி, கடமலைக் குண்டு ஆகிய இடங்களில் 85 மனுக்கள் விசாரிக்கப்பட்டு 58 மனுக்களும், பெரியகுளத்தில் 52 மனுக்கள் விசாரணை செய்யப்பட்டு 29 மனுக்களும் தீர்வு காணப்பட்டன. மாவட் டம் முழுவதும் மொத்தம் 533 மனுக்கள் விசாரணை நடத்தப் பட்டது. அதில் 323 மனுக்கள் ஒரே நாளில் தீர்வு காணப் பட்டது.

இந்த முகாம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் கூறுகையில், ‘பொது மக்களுக்கு காலதாமதம் இல் லாமல், நேரம் மற்றும் அலைச் சலை குறைக்கவும், விரைவில் நீதி கிடைக்கவும் போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள மனுக்களை குறைக்கவும் சிறப்பு மனு விசாரணை முகாம் நடத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து தேனி மாவட்டத் தில் இதுபோன்ற சிறப்பு முகாம் கள் நடத்தப்படும்’ என்றார்.

On Wednesday, September 17, 2014 by farook press in ,    
தேனி மாவட்டத்தில், சட்டவிரோதமாக திராவகம் விற்பனை செய்யப்படுகிறதா? என்று போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

திராவகம் விற்பனை

கல்லூரி மாணவிகள் மீது திராவகம் (ஆசிட்) வீசப்படும் சம்பவம் எதிர்பாராத வகை யில் நடந்து வருகிறது. இத னால் திராவகம் விற்பனை செய்ய ஏற்கனவே கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. சமீபத்தில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 2 கல்லூரி மாணவிகள் மீது மர்ம நபர் திராவகம் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்ப வத்தின் எதிரொலியாக சட்ட விரோதமாக திராவகம் விற் பனை செய்வதை தடுக்கும் வகையில் தேனி மாவட்டத்தில் திராவகம் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் ரசாயன பொருட்கள் விற்பனை செய் யும் கடைகளில் சோதனை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் உத்தர விட்டார்.

அதன்படி போலீஸ் துணை சூப்பிரண்டுகள் மேற்பார்வை யில் அந்தந்த உட்கோட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தீவிர சோதனை நடத்தினர். மாவட்டம் முழு வதும் போலீசார் இந்த திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

கடைகளில் சோதனை

தேனியில் போலீஸ் இன்ஸ் பெக்டர் முத்துக்குமார் தலை மையில், சப்-இன்ஸ் பெக்டர் ரேகா மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் ரசாயன பொருட்கள் விற்பனை செய் யும் கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். கடைகளில் திராவகம் விற் பனைக்கு வைக்கப்பட்டு உள்ளதா? என்றும், திராவகம் விற்பனை செய்யும் கடைகளில் அதற்கான உரிமம் பெற்றுள் ளனரா? என்றும் சோதனை நடத்தப்பட்டது. ரசாயனம் வைக்கப்பட்டு உள்ள குடோன் களுக்கு சென்றும் போலீசார் சோதனை செய்தனர்.

திராவகம் விற்பனை செய் யும் உரிமம் பெற்ற சில்லறை கடைகளில் அதன் உரிமையா ளர் யாருக்கு, எவ்வளவு திராவ கம் விற்பனை செய்கிறார் என்ற விவரம் அடங்கிய விவர பதி வேட்டை பராமரிக்க வேண் டும். 18 வயதுக்கு குறைவான வர்களுக்கு திராவகம் விற்பனை செய்யக்கூடாது. உரிமம் பெறாமல் சட்ட விரோ தமாக விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சோதனையின் போது போலீசார் அறிவுறுத்தினர்.

Friday, September 05, 2014

On Friday, September 05, 2014 by farook press in ,    
தேனி மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முடிவடைந்தது. வேட்பு மனுக்கள் இன்று (வெள் ளிக் கிழமை) பரி சீலனை செய்யப்பட உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள வார்டு கவுன் சிலர்கள், தலைவர்கள் போன்ற பணியிடங்களுக்கான இடைத்தேர்தல் வருகிற 18-ந் தேதி (வியாழக்கிழமை) நடை பெற உள்ளது. தேனி மாவட் டத்தில் தேனி அல்லிநகரம் நகராட்சி 26-வது வார்டு மற்றும் 33-வது வார்டு, சின்ன மனூர் ஊராட்சி ஒன்றியம் 3-வது வார்டு, மார்க்கையன் கேட்டை பேரூராட்சி 12-வது வார்டு, காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி 3-வது வார்டு, 6-வது வார்டு, உத்தமபாளையம் பேரூராட்சி 1-வது வார்டு, வடுகப்பட்டி பேரூராட்சி 5-வது வார்டு ஆகிய பதவிகள் காலியாக உள்ளன.
மேலும் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட் பட்ட சித்தார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவியும், கிராம ஊராட்சிகளில் மொத் தம் 20 வார்டுகளின் உறுப் பினர் கள் பதவியும் காலியாக உள்ளது. உள்ளாட்சி அமைப்பு களில் மொத்தம் 30 பதவிகள் காலியாக உள்ளன.
இதற்காக வேட்பு மனு தாக் கல் கடந்த 28-ந்தேதி தொடங் கியது. வேட்பு மனு தாக்கலுக்கு நேற்று கடை நாள் ஆகும். கடைசி நாளில் பா.ஜ.க. வேட் பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். தேனி அல்லிநகரம் நகராட்சியில் 26-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிச்சைமணி (வயது 42) என்பவர் நேற்று மனு தாக்கல் செய்தார். அப்போது தேனி நகர பாரதிய ஜனதா கட்சி தலைவர் கும ரேசன், தேனி நகர தே.மு.தி.க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராமராஜ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். 33-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு இறுதி நாளான நேற்று யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. சின்னமனூர் ஒன்றியம் 3-வது வார்டு இடைத்தேர்தலுக்கு அ,திமு.க சார்பில் ராமையா மனு தாக்கல் செய்தார். அப்போது ஒன்றிய செயலாளர் முத்து சாமி, ஒன்றிய குழுதலைவர் பாண்டியராஜன், பேரூர் செயலாளர் மனோகரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சித்தார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அதே கிராமத்தை சேர்ந்த மனோரஞ்சிதம், தன சேகரன், ரமேஷ், நந்தராஜ் ஆகியோர் மனுதாக்கல் செய் தனர். இந்த ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மொத்தம் 5 மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டு உள்ளன.
வேட்பு மனு தாக்கல் நேற்று பிற்பகல் 3 மணியுடன் முடிவடைந்தது. இதுவரையில் தேனி அல்லிநகரம் நகராட்சி 26-வது வார்டு மற்றும் 30-வது வார்டுக்கு தலா 3 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். பேரூ ராட்சிகளில் மார்க்கையன் கோட்டை 12-வது வார்டுக்கு 2 பேர், காமயகவுண்டன்பட்டி 6-வது வார்டுக்கு 5 மனுக்கள், 3-வது வார்டுக்கு 4 மனுக்கள், உத்தமபாளையம் 1-வது வார்டுக்கு 2 மனுக்கள், வடுகப் பட்டி 5-வது வார்டுக்கு 6 மனுக்கள் என நகர் பகுதி களுக்கு மொத்தம் 25 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள் ளன.
ஊரக பகுதிகளை பொறுத்தவரை சின்னமனூர் ஊராட்சி ஒன்றியம் 3-வது வார்டுக்கு 2 மனுக்கள், சித்தார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 5 மனுக்கள், கிராம ஊராட்சி வார்டுகளில் காலியாக உள்ள 20 பதவி களுக்கு 52 மனுக்கள் என புறநகர் பகுதிகளுக்கு மொத்தம் 59 மனுக்கள் தாக் கல் செய்யப்பட்டு உள்ளன.

மனுக்கள் மீது இன்று (வெள்ளிக்கிழமை) பரிசீலனை செய்யப்பட உள்ளது. மனுக் களை வாபஸ் பெற 8-ந்தேதி (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். வாக்குப்பதிவு 18-ந் தேதி நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை 22-ந்தேதி நடை பெற உள்ளது.

Thursday, July 24, 2014

On Thursday, July 24, 2014 by Anonymous in    
போடி அருகே, விவசாய நிலங்களில் மதுரை வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செயல்முறை விளக்க ஆய்வு மேற்கொண்டனர்.
வேளாண்மைக் கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் கிராமப்புற வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் கிராமங்களில் தங்கி விவசாயம் குறித்த செயல்முறை விளக்கம் பெற வேண்டும். இத்திட்டத்தின் கீழ் மதுரை வேளாண் கல்லூரியில் பயிலும் மாணவிகள் ஹேமாவதி, இத்திஸ்ரீ, கலைவாணி, கலாமணி, கார்த்திகா, கார்த்திகேயணி, மீனா, மீனாபிரியா ஆகிய மாணவிகள் போடி அருகே கோடாங்கிபட்டியில் செயல்முறை விளக்க ஆய்வு மேற்கொண்டனர்.
இத்திட்டத்தின் கீழ் தென்னை மரத்திற்கு டானிக் பயன்படுத்தும் முறை, மண் மாதிரி எடுக்கும் முறை, விதை நேர்த்தி செய்யும் முறை அவற்றின் முக்கியத்துவம் பற்றி செயல்விளக்கம் பெற்றனர். மேலும் விவசாயிகளுக்கும் செய்து காட்டி விளக்கினர்.
இதேபோல் கனுப்புழு பாதிப்பைத் தடுக்கும் முறைகளையும் எடுத்துக்கூறினர். விவசாயிகள் விவசாயம் செய்யும் முறைகளையும் அறிந்து குறிப்பெடுத்துக் கொண்டனர்.
மாணவிகளுக்கு போடி வேளாண்மை உதவி அலுவலர் அப்புசாமி வழிகாட்டினார். கோடாங்கிபட்டி விவசாயிகள் பங்கேற்று மாணவிகளிடம் செயல்முறை விளக்கம் பெற்றனர்.