Wednesday, September 17, 2014

On Wednesday, September 17, 2014 by farook press in ,    
தேனி மாவட்டத்தில் போலீஸ் துறை சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு விசாரணை முகாமில் ஒரே நாளில் 323 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

சிறப்பு விசாரணை முகாம்

தேனி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் நிலு வையில் இருக்கும் மனுக்களை சிறப்பு முகாம்கள் நடத்தி தீர்வு காண மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் உத்தர விட்டார். அவருடைய உத்தர வின் பேரில் தேனி, போடி, சின்னமனூர், உத்தம பாளை யம், ஆண்டிப்பட்டி, கட மலைக்குண்டு, பெரியகுளம் ஆகிய 7 இடங்களில் சிறப்பு மனு விசாரணை முகாம் நேற்று நடத்தப்பட்டது.

இந்த முகாமிற்கு அந்தந்த பகுதி போலீஸ் துணை சூப்பி ரண்டுகள் தலைமை தாங்கி னர். தேனியில் நடந்த முகாமில் போலீஸ் இன்ஸ் பெக்டர்கள் முத்துக்குமார், வெங்கடாசல பதி, சப்-இன்ஸ்பெக்டர் உதய குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். போலீஸ் நிலையம் வாரியாக தனித்தனி குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு மனுக்கள் மீது விசாரணை நடத்தி தீர்வு காணப்பட்டன. இதில் 130 மனுக்கள் விசா ரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டு, 115 மனுக்கள் தீர்வு காணப்பட்டன.

323 மனுக்கள் தீர்வு

அதேபோன்று போடி, சின்னமனூர் பகுதிகளில் 79 மனுக்கள் விசாரணை நடத்தப் பட்டது. அதில் 54 மனுக்கள் தீர்வு காணப்பட்டன. உத்தம பாளையத்தில் 87 மனுக்கள் மீது விசாரணை நடத்தி, 67 மனுக்கள் தீர்வு காணப்பட்டன. ஆண்டிப்பட்டி, கடமலைக் குண்டு ஆகிய இடங்களில் 85 மனுக்கள் விசாரிக்கப்பட்டு 58 மனுக்களும், பெரியகுளத்தில் 52 மனுக்கள் விசாரணை செய்யப்பட்டு 29 மனுக்களும் தீர்வு காணப்பட்டன. மாவட் டம் முழுவதும் மொத்தம் 533 மனுக்கள் விசாரணை நடத்தப் பட்டது. அதில் 323 மனுக்கள் ஒரே நாளில் தீர்வு காணப் பட்டது.

இந்த முகாம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் கூறுகையில், ‘பொது மக்களுக்கு காலதாமதம் இல் லாமல், நேரம் மற்றும் அலைச் சலை குறைக்கவும், விரைவில் நீதி கிடைக்கவும் போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள மனுக்களை குறைக்கவும் சிறப்பு மனு விசாரணை முகாம் நடத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து தேனி மாவட்டத் தில் இதுபோன்ற சிறப்பு முகாம் கள் நடத்தப்படும்’ என்றார்.

0 comments: