Thursday, July 24, 2014

On Thursday, July 24, 2014 by Anonymous in    

Yuvan-shankar-raja-2

கார்த்தி, லட்சுமிமேனன் நடிக்கும் படம் கொம்பன். குட்டிப்புலி இயக்குனர் முத்தையா இயக்குகிறார். பருத்தி வீரனுக்கு பிறகு கார்த்திக் நடிக்கும் வில்லேஜ் சப்ஜெக்ட்.
ஜாலியான வில்லேஜ் காமெடி லவ் ஸ்டோரி. படப்பிடிப்புகள் காரைக்குடி பகுதியில் நடந்து வருகிறது. படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பதாக இருந்தது. தற்போது அவர் படத்திலிருந்து விலகி விட்டார்.
அவருக்கு பதிலாக ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். கொம்பனுக்கு தான் இசை அமைக்கும் விஷயத்தை தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்.
கிராமிய பாடல்கள் என்பதால் தான் யுவன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இப்போது அவர் விலகியதற்கான காரணம் தெரியவில்லை.

0 comments: