Saturday, August 16, 2014

On Saturday, August 16, 2014 by Unknown in ,    
400 ஆண்டு பழமையான முனியாண்டி சுவாமி கோவிலை அன்னதான திட்டத்தில் சேர்க்க வேண்டும்: பக்தர்கள் வேண்டுகோள்
400 ஆண்டுகள் பழமையான அலங்காநல்லூர் முனியாண்டி சுவாமி கோவிலை முதலமைச்சரின் அன்னதான விரிவாக்க திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் உள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற முனியாண்டி சுவாமி கோவில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதுபோக மதுரைக்கு வரும் பக்தர்கள் மீனாட்சியம்மன்கோவில், அழகர் கோவில் உள்ளிட்ட ஸ்தலங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அலங்காநல்லூரில் உள்ள முனியாண்டி சுவாமி கோவிலுக்கும் வந்து செல்கின்றனர். உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டு ஆண்டுதோறும் நடைபெறும்போது முனியாண்டி சுவாமிக்கு முதல் பூஜையும், மரியாதை செய்த பின்னரே தொடங்கப்படுவது தொன்று தொட்டு இன்றளவும் வழக்கத்தில் உள்ளது.
இந்நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் 106 கோவில்கள் அன்னதான திட்டத்தில் விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். இதில் அலங்காநல்லூர் முனியாண்டி சுவாமி கோவிலும் சேர்க்கப்பட வேண்டும் என்பது இப்பகுதி பொதுமக்கள், பக்தர்கள் அனைவரும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

0 comments: