Saturday, August 16, 2014

On Saturday, August 16, 2014 by Unknown in ,    
சோலைமலை முருகன் கோவிலுக்கு இலுப்பூரிலிருந்து 108 காவடி எடுத்து பாதயாத்திரை வந்த பக்தர்கள்
முருகனின் ஆறாவது படை வீடான சோலைமலை முருகன் கோவிலுக்கு இலுப்பூரி லிருந்து 108 காவடிகள் எடுத்து பக்தர்கள் பாதையாத்திரையாக சென்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் திருமுருகன் வார வழிபாட்டு சபை சார்பில் 41–ம் ஆண்டு 108 காவடிகள் முருகபக்தர்கள் இலுப்பூரிலிருந்து புறப்பட்டு சென்றனர்.
தொடர்ந்து திருச்சி, சிவகங்கை மற்றும் மதுரை மாவட்டம் மேலூர் வழியாக 4–வது நாள் வந்து அழகர்கோவில் கோட்டை வாசலை அடைந்தனர்.
பால், பன்னீர், புஷ்பம், மயில் போன்ற காவடிகள் எடுத்து ஆடிப்பாடி பாதயாத்திரையாகவே அழகர்மலை வந்து மலை உச்சியில் உள்ள சோலை முருகன் கோவிலை சேர்ந்தனர். இதில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டனர். கோவிலுக்குள் மேளதாளம் முழங்க பக்தர்கள் சுமார் ஒரு மணிநேரம் காவடிகளுடன் ஆடினார்கள்.
தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேத முருக பெருமானுக்கு பால், பழம், பன்னீர், பஞ்சாமிர்தம், புஷ்பம், விபூதி, சந்தனம், இளநீர் உள்ளிட்ட 36 வகையான அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சுமார் 160 கிலோமீட்டர் தூரம் பாதையாத்திரையாக வந்த முருக பக்தர்களை கோவில் நிர்வாகத்தின் சார்பில் தக்கார் வெங்கடாசலம் ஏற்பாட்டில் நிர்வாக அதிகாரி வரதராஜன் மற்றும் முருகன் கோவில் பணியாளர்கள் வரவேற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை இலுப்பூர் வார வழிபாட்டுச் சபையின் தலைவர் முத்து விநாயகம், செயலாளர் சந்தானம், பொருளாளர் சேகரன் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

0 comments: