Monday, August 25, 2014

On Monday, August 25, 2014 by Unknown in ,    

மதுரையில் விபத்தில் சிக்கிய மேலூர் ‘108’ ஆம்புலன்ஸ் வாகனம் 78 நாட்களாகியும் அதற்கு பதிலாக மாற்று ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கப்படாததால் மேலூர் பகுதியில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
‘108’ ஆம்புலன்ஸ் ஏழை, எளிய, கிராமப்புற மக்கள் அவசர சிகிச்சை பெற அரசு ‘108’ ஆம்புலன்ஸ் அவசர கால இலவச சேவைதிட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘108’ என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அழைத்தால் சம்பவ இடத்துக்கு உடனே வந்து சிகிச்சை தேவைப்படுவோரை மருத்துவமனைக்கு இந்த ஆம்புலன்ஸ் வாகனம் இலவசமாக கொண்டு செல்லும். இதன்மூலம் கிராமப்புற மக்களும் அவசர சிகிச்சை வசதி பெறுவார்கள் என்பதால் இந்த திட்டத்தை அரசு அமுல்படுத்தியுள்ளது.
3 ஆயிரம் கிராமங்கள் மேலூர் தாலுகாவில் 56 ஊராட்சிகளில் 3ஆயிரம் கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் பிரசவம், உடல் நலக்குறைவு, விபத்து அவசர சிகிச்சை பெற மேலூர் தாலுகாவிற்கு மூன்று ‘108’ ஆம்புலன்ஸ்களை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. மேலூரில் இரண்டு ஆம்புலன்ஸ்களும், கொட்டாம்பட்டிய்ல் ஒரு ஆம்புலன்சும் இயங்கி வந்தன.
விபத்து அதிகம் நடைபெறும் மேலூர் நான்குவழிச் சாலையில் ஒரு மாதத்தில் 70க்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதில் சிக்கியவருக்கு சிகிச்சை அளித்து உயிர்காக்கும் முக்கிய பணியில் இந்த ஆம்புலன்சுகள் இயங்கி வந்தன. இதுதவிர கிராமப்புற மக்களின் ஏராளமான அவசரகால அழைப்புகளை ஏற்றும் திறம்பட பணிகளை மேற்கொண்டன.
விபத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ் கடந்த மே மாதம் 31–ந்தேதியன்று மேலூர் பகுதிக்கான ‘108’ ஆம்புலன்ஸ் ஒன்று நோயாளியுடன் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றபோது கே.கே.நகர் ஆவின் பால்பண்ணை அருகே போக்குவரத்து சிக்னலில் எதிரே வந்த கார் மீது மோதியது.
இதில் ஆம்புலன்சின் முன் பகுதி சேதமானது. இந்த வழக்குக்காக இந்த ஆம்புலன்ஸ் மதுரை தல்லாகுளம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
உயிரிழப்புகள் அதிகரிப்பு விபத்தில் ஆம்புலன்ஸ் சிக்கி 78 நாட்களாகியும் மேலூருக்கு மாற்று ‘108’ ஆம்புலன்ஸ் வழங்காததால் மேலூர் பகுதியில் உரிய நேரத்துக்கு ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காமல் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. தற்போது மேலூரில் ஒரே ஒரு ‘108’ஆம்புலன்ஸ் மட்டுமே உள்ளதால் அந்த வாகனமும் மதுரைக்கு நோயாளிகளை கொண்டுசெல்லும் நேரத்தில் மேலூர் பகுதி அவசர அழைப்புகளுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகம், புதூரில் இருந்து ‘108’ஆம்புலன்ஸ்கள் மேலூருக்கு வரவழைக்கப்படுகின்றன.
இதனால் 2மணிநேரம் தாமதமாக வந்து நோயாளிகளை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு மீண்டும் ஒரு மணிநேர பயணத்துக்கு பின்னரே ‘108’ ஆம்புலன்ஸ் சேவை கிடைக்கிறது.
மீண்டும் வருமா? இதனால் ஏற்படும் தாமதம் காரணமாக சிகிச்சை பயன் இன்றி வழியிலேயே நோயாளிகள் இறந்து போன அவலம் ஏற்பட்டுள்ளது. இதுதவிர எந்த ‘108’ ஆம்புலன்ஸ் மேலூர் பகுதிக்கு வரவழிக்கக்கப்படுகிறதோ அந்த பகுதியிலும் அவசர கால சேவைகள் பாதிக்கப்படுகின்றன.
எனவே விபத்தில் சிக்கிய ‘108’ஆம்புலன்சுக்கு பதிலாக மாற்று ஆம்புலன்ஸ் வழங்கி மேலூர் பகுதியில் அதிகரித்து வரும் உயிரிழப்புகளை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

0 comments: