Monday, August 25, 2014

On Monday, August 25, 2014 by Unknown in ,    

மதுரை சொக்கிகுளத்தில் உள்ள நளா பல்மருத்துவமனை, மகாத்மா பள்ளி சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையேயான அறிவு திறன் போட்டிகள் நடைபெற்றது. இதில் இறுதி சுற்று போட்டியில் முதல் மூன்று இடங்களை லட்சுமி பள்ளி மாணவர்கள் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா மருத்துவமனை வளாகத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்றது. மாநகராட்சி நகர் பொறியாளர் மதுரம், டாக்டர்.கண்ணபெருமான் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். முன்னதாக மருத்துவமனை இயக்குநர் நளாயினி போட்டிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அனுஷா கண்ணபெருமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: