Monday, August 25, 2014
தமிழுக்குச் செம்மொழி வாரம்கொண்டாட வேண்டும் என்றுஇந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுப்பிய கடிதத் திற்கான பதில் இதுவரை வர வில்லை. இதுகுறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கருத்துஎன்ன என தமுஎகச கவுரவத் தலைவர் பேரா.அருணன் வினா எழுப்பியுள்ளார்.
மதுரை காளவாசலில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் மாநி லக்குழு சார்பில் தாய்த்தமிழுக்கு நீதி கேட்டு உண்ணாநிலை அறப் போராட்டம் நடைபெற்றது.இப்போராட்டத்தின் நோக்கங்களை விளக்கி பேரா.அருணன் பேசியதாவது: இந்தியாவில் உள்ள 125 கோடி பேரில் 40 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் தான் இந்தி பேசுகிறார்கள். மீதமுள்ள 60 சத வீதம் பேர் பிறமொழிகளைப் பேசுபவர்கள். ஆனால், இந்தியா வில் இந்திக்காரர்களுக்கு இந்தி, அல்லாதவர்களுக்கு ஆங்கிலம் என்ற நிலை உருவாகியுள்ளது. இந்தி தவிர 21 மொழிகளுக்கான சம அந்தஸ்தை மத்திய ஆட்சி யாளர்கள் தர மறுக்கிறார்கள். சமீபத்தில் நடைபெற்ற தேர்வாணை யத் தேர்வினை இந்தியில் தான் நடத்த வேண்டும் என்று இந்தி பேசுவோர் போராட்டம் நடத் தினர்.
திறனறிவுத் தேர்வு என்பது ஆங்கிலத்தில் நடத்தப்பட்டு வருகிறது. ஒரு மொழி என்பது அவரவர் திறமைiயை வெளியே கொண்டு வரும் கருவியாகும். ஆனால், அந்நிய மொழியில் தேர்வை எழுதினால் எப்படி பூரண மாக அவர்களது திறமையைக் கொண்டு வர முடியும். ஆனால், மத்திய அரசோ, இந்தி பேசுபவர்களுக்கு இந்தியில் தேர்வு, மற்றவர்களுக்கு ஆங்கிலத் தில் தேர்வு என நிலை எடுத்தது சரியான நிலைபாடு தானா?தமிழகத்தில் உள்ள உயர் நீதிமன்றங்களில் அலுவல் மொழி யாக தமிழைக் கொண்டு வருவதை மத்திய அரசு ஏற்கவில்லை என்றுசொல்லவில்லை. ஆனால், அதற் கான செலவை யார் செய்வது என்றகேள்வியை எழுப்புகிறது.
பெருமுதலாளிகளுக்கு 5 லட்சம் கோடி ரூபாயை வரிச்சலுகை செய் யும் மத்திய அரசுக்கு, தமிழுக்கு நிதி ஒதுக்க மனமில்லையா? மத்திய அரசுப்பள்ளிகளுக்கு சமீபத்தில் மனித வள மேம் பாட்டு துறை சார்பில் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில், இந்திய மொழிகளின் தாய் சமஸ்கிருதம் என்று கூறப் பட்டுள்ளது. இந்தியாவில் பல மொழிக்குடும்பங்கள் உள்ளன. சமஸ்கிருதம், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஒடிசா ஆகிய 6 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சமஸ்கிருதத்திற்கு மட்டும் வாரம் கொண்டாடுவது என்ன நியாயம்? சமஸ்கிருத வாரம்கொண்டாட முடியாது. தமி ழுக்குச் செம்மொழி வாரம் அறி விக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.
இதற்கு மோடியின் பதில் என்ன? அரசியல் சாசனத்தின் 8 வது அட்டவணையின்படி அனைத்து மொழிகளுக்கும் சமஉரிமை வழங்க வேண்டும். தான்அனுப்பிய கடிதத்திற்கு மத் திய அரசு இதுவரை ஏன் பதி லளிக்கவில்லையென்று முதல்வர் ஜெயலலிதா பதிலளிக்க வேண்டும்.இந்தியை எதிர்க்க ஆங்கிலம் இருக்கட்டும் என அண்ணா முதல் ராஜாஜி வரை ஏற்றுக்கொண்டது வினோத கணக்கு.
அது ஒரு தவறான கணக்கு. இந்திக்கும், சமஸ்கிருதத்திற்கும் மாறாக ஆங் கிலத்திணிப்பு கூடாது என்கிறோம். தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவதற்கு காரணம் உட்கட்டமைப்பு, போதிய ஆசிரியர் இல்லாமை, நவீனப் பாடக்கருவிகள் இல்லாதது தான். ஆனால், அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழியைப் பரவலாக்க தமிழக அரசு எடுக்கும் நட வடிக்கை என்பது தனியார் பள்ளிகளைப் போல, அரசுப்பள்ளி களிலும் தமிழ் வழிக்கல்வி இல் லாத நிலை ஏற்படும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
 - 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
 - 
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
 - 
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
 - 
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
 - 
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
 - 
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
 
0 comments:
Post a Comment