Wednesday, August 13, 2014

On Wednesday, August 13, 2014 by Unknown in ,
அனைத்து ஊராட்சிகளிலும் ஆக.15 இல் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில், நியாய விலைக் கடைகளின் பதிவேடுகள் சமூகத் தணிக்கை செய்யப்பட உள்ளன.
 பொதுவிநியோகத் திட்டச் செயல்பாட்டிலும், நியாய விலைக் கடைகளில் செயல்பாட்டிலும் வெளிப்படையான முறையைக் கொண்டு வரும் வகையில் நியாய விலை கடைகளின் பதிவேடுகள் சமூகத் தணிக்கைக்கு உள்படுத்தப்படவுள்ளன.
 கிராமப்புறங்களில் செயல்படும் அனைத்து நியாய நிலைக் கடைகளின் அ பதிவேடு, சிட்டா பதிவேடு, இருப்பு பதிவேடு, ஆய்வு பதிவேடு, மண்ணெண்ணெய் டெலிவரி வவுச்சர்கள், பில் புத்தகங்கள் ஆகியன ஆக. 15 ஆம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் சமூகத் தணிக்கைக்காக பொதுமக்கள் முன்பு வைக்கப்படவுள்ளது.
 ஆகவே, ஆக.15 ஆம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்று அந்தந்த ஊராட்சிக்குரிய நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகளை மேமóபடுத்த கருத்துக்களைத் தெரவிக்கலாம்.
 மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் இத் தகவலைத் தெரிவித்துள்ளார்.