Wednesday, August 13, 2014

On Wednesday, August 13, 2014 by Unknown in ,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பாரதிய ஜனதா கட்சி ஒன்றிய சிறப்பு செயற்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மண்டல தலைவர் டி.ஏ.எஸ்.சசிக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் கே.எஸ்.முத்துராம், மண்டல துணைத்தலைவர் பி.கண்ணபிரான், ஒன்றிய பொதுச்செயலாளர்கள் வி.முருகன், கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கேந்திரதலைவர் கருணாகரன் வரவேற்றார். கூட்டத்தில் மாநிலச் செயலாளர் சு.பழனிவேல்சுவாமி, மாவட்ட பொதுச்செயலாளர் மகா.சுசீந்திரன், எம்.ஜி.சிவலிங்கம் ஆகியோர் பேசினர். மண்டல பொருளாளர் விஜயகுமார் அறிக்கை வாசித்தார். அதில் சோழவந்தான் ரயில்வே மேம்பாலவேலையை தீவிரப்படுத்தவேண்டும்.
 சோழவந்தான் ஜெனகை மாரியம்மன்கோயில் தேரை நவீனமாக்கி தேரடி பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும். தாதம்பட்டி ஒட்டான்குளத்தை தூர்வாரி பூங்கா அமைக்கவேண்டும்.
 வாடிப்பட்டி நான்குவழிச்சாலையில் செல்லும் வெளியூர்பேருந்துகள் அனைத்தும் முன்புபோல் பேருந்து நிலையம் வந்து செல்லவேண்டும். குருவித்துறை குருபகவான்கோயில் சாலையை சீரமைத்து கூடுதல் பஸ்விடவேண்டும். குட்லாடம்பட்டி அருவி, குருபகவான் கோயில்களை சுற்றுலாதலமாக அறிவிக்கவேண்டும்.
 வாடிப்பட்டி பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் பழுதான கட்டிடங்களை மராமத்து செய்திடவேண்டும். சோழவந்தான் தொகுதியில் அரசுகலைக்கல்லூரி, தொழில்பேட்டைகள் அமைக்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 முடிவில் மாவட்ட பொருளாளர் சுந்தரராஜன் நன்றி கூறினார்