Wednesday, August 13, 2014

On Wednesday, August 13, 2014 by Unknown in ,
அதிவேகமாக வந்த அரசுப் பேருந்து மோதியதில் டீக்குடித்துக் கொண்டிருந்தவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
 மதுரை விராட்டிபத்து முத்துத்தேவர் காலனியைச் சேர்ந்த ஆண்டியப்பன் மகன் சக்திவேல் (38). இவர் விராட்டிபத்து பிரதான சாலையில் காலையில் டீக்குடித்துக்கொண்டிருந்தார்.அப்போது வந்த அரசுப் பேருந்து சாலையிலிருந்து விலகி டீக்கடை முன்பு இருந்தவர்கள் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் சக்திவேல் மற்றும் கண்ணன் ஆகியோர் காயமடைந்தனர். அவர்களை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர்.
 தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சக்திவேல் உயிரிழந்தார். கண்ணன் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகிறார். இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.
 ஷட்டர் விழுந்து சாவு: ராமநாதபுரம் மாவட்டம் ஆலந்தூரைச் சேர்ந்தவர் முகம்மதுஇப்ராஹிம் (55). இவர் மதுரை நாகனாகுளம் பேங்க்காலனி பகுதியில் பேன்ஸி ஸ்டோர் வைத்துள்ளார்.
 கடையை பகலில் மூடிவிட்டு மீண்டும் மாலையில் திறந்துள்ளார். அப்போது இரும்பு ஷட்டரை மேலே தூக்கிவிட்டு கடைக்குள் செல்ல முயன்றார். ஆனால், ஷட்டர் திடீரென அவரது தலையில் விழுந்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்தார். ஊமச்சிகுளம் போலீஸார் வழக்குப்பதிந்து முகம்மதுஇப்ராஹிம் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.