Wednesday, August 13, 2014
மதுரை மாவட்ட கோர்ட்டு அருகே மாட்டுத்தாவணிக்கு செல்லும் வழியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இன்று காலை கடை திறப்பதற்கு முன்பே போதை பிரியர்கள் சரக்கு வாங்க காx`x`x`x`த்திருந்தனர். காலை 10 மணி அளவில் கடை திறந்தபோது காத்துக் கொண்டிருந்த அவர்கள் சரக்கு வாங்கும் ஆர்வத்துடன் சென்று டாஸ்மாக் கடை விற்பனையாளர் செல்லத் துரையை நச்சரித்தனர். அவரும் பொறுமையுடன் சரக்குகளை கொடுத்தார்.
இதில் ஒரு வாலிபர் சரக்கு வாங்கி அதே இடத்திலேயே ‘ராவாக’ அடித்தார். சிறிது நேரத்தில் அவருக்கு போதை தலைக்கேறியது. ஆனாலும் அந்த வாலிபர் மீண்டும் சரக்கு வாங்குவதற்காக டாஸ்மாக் விற்பனையாளர் செல்லத்துரையை அணுகினார். அப்போது அவர் சிறிது நேரம் காத்திருங்கள் என்று கூறினார்.
ஆனால் தனக்கு உடனடியாக சரக்கு வேண்டும் என்று செல்லத்துரையை அந்த வாலிபர் தொந்தரவு செய்தார். சரக்கு கொடுக்க சிறிது தாமதம் ஆனதால் பொறுமை இழந்த அவர் போதையில் திடீரென்று செல்லத்துரையின் கை, கன்னத்தில் கடித்தார். மேலும் ஆத்திரம் அடைந்த அவர் அருகில் நின்றிருந்த 4 பேரையும் கடித்தார். இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது.
போதையில் ரகளை செய்த அந்த வாலிபரை அங்கிருந்தவர்கள் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். மேலும் அங்கே இருந்த கம்பத்தில் கட்டி போட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அண்ணாநகர் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து அந்த வாலிபரை மீட்டனர். வாலிபரிடம் விசாரணை நடத்தியதில் ரகளை செய்த வாலிபர் மானகிரியை சேர்ந்தவர் என தெரியவந்தது.
இதற்கிடையில் சம்பவம் குறித்து அறிந்து கொண்ட வாலிபரின் மனைவியும் சம்பவ இடம் வந்து தனது கணவரை விடுவிக்குமாறு கண்ணீர் மல்க கூறினார். இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை எச்சரித்து அனுப்பினர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோட்டில் 80 கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்க...
-
The 10 th mid-year Chemical Research Society of India (CRSI) Symposium in Chemistry was jointly organized by National Ins...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருப்பூர் காங்கயம் ரோடு செயின்ட் ஜோசப் பெண்கள் கல்லூரியில் நிர்வாகவியல் துறை சார்பில் விற்பனை கண்காட்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சவுரி...
-
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் 18- ஆண்டுகளாக தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும்27ஆயி...
-
திருப்பூர் அருகே உள்ள வஞ்சிபாளையத்தில் இருந்து காலேஜ் ரோடு வழியாக ஆட்டோ ஒன்று அதிவேகமாக வந்துகொண்டிருந்தது. அப்போது எதிரே ரோட்டோரம் விய...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...