Wednesday, August 13, 2014
நாட்டின் 68–வது சுதந்திர தினம் வருகிற 15–ந்தேதி கொண்டாடப்படுகிறது. அனைத்து பகுதிகளிலும் சுதந்திர தின கொண்டாடட்டங்கள் வெகுசிறப்பாக நடத்தப்படும். இதையொட்டி அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகிறார்கள்.
மதுரையில் சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தையொட்டி முக்கிய இடங்களான மீனாட்சி அம்மன் கோவில், ரெயில் நிலையம், விமான நிலையம் மற்றும் முக்கிய வழிபாட்டு தலங்கள், அரசு அலுவலகங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சோதனை சாவடிகளிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு வாகன சோதனைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது. போலீசார் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
தீவிரவாதிகளால் அடிக்கடி மிரட்டல்கள் வரும் மீனாட்சி அம்மன் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பக்தர்கள் வருகையை வீடியோவில் பதிவு செய்யயப்படுகிறது.
பக்தர்கள் கொண்டுவரும் பொருட்கள், பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது.
மதுரை ரெயில் நிலையத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். பயணிகள் கொண்டுவரும் உடமைகள் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது. மேலும் மதுரைக்கு வரும் ரெயில்கள், புறப்படும் ரெயில்களிலும் அடிக்கடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
ரெயில் மூலம் பார்சல் அனுப்புவதிலும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையிலும் நாளை (13–ந் தேதி) முதல் 16–ந்தேதி வரை தடை விதிக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று மாலை வெளியிடப்படும் என்று ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாநகராட்சி 2–வது மண்டலத்துக்கு உட்பட்ட 16–வது வார்டு முதல் 30–வது வார்டு வரை உள்ள 15 வார்டுகளில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள் ...
-
திருப்பூர் பலவஞ்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 36). இவருடைய மனைவி தமிழரசி. இவர்கள் 2 பேரும் அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தி...
-
Share on facebook More Sharing Services கனடாவை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் தனது எட்டு உடல் உ...
-
திருப்பூர் போயம்பாளையம் வடிவேல் நகரை சேர்ந்தவர் கலைவாணன் (வயது 38). சம்பவத்தன்று வேலைக்கு செல்ல ரோட்டை கடப்பதற்காக ரோட்டோரம் நின்றுகொண்டி...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
திருச்சி அயன் ஸ்டீல் மெர்ச்சென்ட்ஸ் அசோசியேசன் சார்பாக கடலூர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 லட்சம் மதிப்புள்ள அத...
-
திருச்சி திருச்சியில் 10315,10409 நம்பர்கள் உடைய மதுபான கடையை திறக்க கூடாது என வலியுறுத்தி நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் கூறுகைய...
-
நங்கவரம் பண்ணை சார்பாக கலவை உரக்கிடங்கிற்கு 1 ஏக்கர் நிலம் நன்கொடை ...