Tuesday, August 12, 2014

On Tuesday, August 12, 2014 by Unknown in ,
பெரியாறு அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது: வைகை அணை நீர்மட்டம் 45 அடியாக உயர்வு
கேரளாவில் கடந்த ஒரு மாதமாக தென்மேற்கு பருவ மழை வெளுத்து வாங்கி வந்தது. இதனால் கேரள எல்லை பகுதியான தேக்கடியில் உள்ள பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
தொடர்ந்து நீர்வரத்து அதிகம் இருந்ததால் அணையின் நீர்மட்டம் 112 அடியில் இருந்து தற்போது 124 அடியை தாண்டி உள்ளது. நேற்று நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை ஓய்ந்தது. இதனால் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 124.30 அடியாக உள்ளது. அணைக்கு 1541 கன அடிநீர் வருகிறது. 1311 கன அடிநீர் திறந்து விடப்படுகிறது.
இந்த தண்ணீர் முழுவதும் வைகை அணைக்கு வந்து சேருகிறது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 45.83 அடியாக உயர்ந்தது. அணைக்கு 936 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர் குடிநீருக்காக 40 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.
மஞ்சளாறு அணையில் 29.65 அடி தண்ணீரும், சோத்துப்பாறை அணையில் 46.43 அடி தண்ணீரும் உள்ளது. மஞ்சளாறு பகுதியில் மட்டும் 9 மி.மீ. மழை பெய்து உள்ளது.