Tuesday, August 12, 2014

On Tuesday, August 12, 2014 by Unknown in ,
பெரியார் பிறந்தநாளையொட்டி வினா-விடை எழுத்துப் போட்டிபெரியார் பிறந்தநாளை யொட்டி வினா-விடை எழுத்துப் போட்டி தமிழகம் முழுவதும் 150 மையங்களில் நடத்தப் பட உள்ளது. பெரியார் மணயம்மை பல்கலைக்கழகத்தில் உள்ள பெரியார் உயராய்வு மையம் ஏற்பாட்டில் தந்தை பெரியார் தத்துவம், வாழ்க்கை நிகழ்வுகள், பொதுத்தொண்டு, கொள்கைப் பயணம் ஆகியவைகளை இளையதலை முறையினரும் அறியும் வகைவகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பெரியார் ஆயிரம் எனும் தலைப்பில் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதும் போட்டி நடத்தப்படுகிறது. இதற்கு என பங்கேற்கும் மாணவர் பதிவு கட்டணமாக ரூ50ம் செலுத்த வேண்டும்.

10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலுபவர்களுக்கு பெரியார் சிந்தனைகள் எனும் புத்தகத்தலைப்பில் எழுத வேண்டும். இதற்கு பதிவுக் கட்டணம் ரூ.100 செலுத்திட வேண்டும். இரு பிரிவுப் போட்டியினருக்கு கேள்வி கேட்கப்படும் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும். இப்போட்டிகள் வருகிற 23,24 மற்றும் 30,31-ந்தேதிகளில் நடத்தப்படும்.

சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை ஆகிய 3 ஊர்களில் போட்டிகள் நடத்தப்படுகிறது. வெற்றி பெறும் 3 பேருக்கு ஒவ்வொரு பிரிவிலும் பரிசுகள் ரூ.5ஆயிரம், ரூ.3ஆயிரம், ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். இதில் சிறப்பு பரிசுக்கு மாநில அளவில் தேர்வு செய்பவர்களை 3 நாள் டெல்லிக்கு சுற்றுலாவாக ரெயிலிலும், விமானத்திலும் அழைத்து செல்லப்படுவார்கள். போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை சிவகங்கை மாவட்ட பெரியார் 1000 போட்டிக் குழுவினர் செய்து வருகின்றனர்.