Tuesday, August 12, 2014

On Tuesday, August 12, 2014 by Unknown in ,
மானாமதுரையில் விநாயகர் சிலைகள் செய்யும் பணி தீவிரம்
தமிழகத்திலேயே சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில்தான் அதிக அளவு மண்பாண்ட பொருட்கள் உற்பத்தி செய்து வருகின்றனர். சீசனுக்கு ஏற்ப இங்கு பொருட்கள் செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இம்மாதம் 29–ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா வருகிறது.
மும்பையில் நடைபெறுவதுபோல் தமிழகம் முழுவதும் விநாயகரை வைத்து பூஜை செய்வார்கள். இதற்காக மானாமதுரை மண்பாண்ட தொழிற்கூடத்தில் இரவு பகலாக 7 அடி வரை உயரம் கொண்ட விநாயகர் சிலைகள் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதில் பல ஆண்டுகாலமாக ஒரு கை இல்லாத மாற்றுத்திறனாளியான பாண்டி ஏராளமான விநாயகர் சிலை செய்து வருகிறார். அதேபோல் வாய் பேச முடியாத தங்க மணி என்பவரும் பல வருடங்களாக விதவிதமான விநாயகர் சிலைகளை செய்து வருகிறார். முதலில் தூய களி மண்ணில் செய்யப்பட்டு பின் வர்ணம் பூசப்பட்டு வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இதேபோல் மானாமதுரை குலாளர் தெருவில் வீடுகள் தோறும்பெண்கள் கற்பக விநாயகர், விளக்கு விநாயகர், இலை விநாயகர், ஆனந்த விநாயகர் என விதவிதமான சிறிய விநாயகர் சிலைகளை செய்து தமிழகம் முழுவதும் அனுப்பி வைக்ககப்படுகிறது. ஏராளமான வெளியூர் வியாபாரிகள் ஆர்டர்கள் கொடுத்து சென்று உள்ளனர். களிமண்விநாயகர் சிலைகள் ரூ. ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை செய்து தரப்படுகிறது. வீடுகளில் வைத்து சாமி கும்பிடும் சிறிய விநாயகர் ரூ.5 லிருந்து ரூ.500 வரை கிடைக்கிறது. மானாமதுரையில் சுற்று சுழலுக்கு ஏற்ப களிமண் மூலம் தயாரிக்கப்படுகிறது.
இங்கு தயார் செய்யப்படும் விநாயகர் சிலைகள் தண்ணீரில் எளிதில் கரைந்து விடும். சுற்று சூழலுக்கு மாசு ஏற்படுத்தாது. ஆனால் கெமிக்கல் கலந்து பிளாஸ்டா பாரிஸ்டரில் செய்யப்படும் விநாயகர் சிலைகளை எளிதில் கரைக்க முடியாது.
சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தி கரைக்கும் நீர் நிலைகளும் மாசு அடைந்து விடும். எனவே மண் மூலமே விநாயகர் சிலைகள் வைத்து வழிப்பட தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இதனால் ஏராளமான மண்பாண்ட தொழிலாளர்களுக்கு வாழ்வு கிடைக்கும் என மண்பாண்ட தொழிலாளர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.