Monday, August 25, 2014

On Monday, August 25, 2014 by Unknown in ,    

மதுரை பெத்தானியாபுரத்தைச் சேர்ந்தவர் ராஜா (வயது25). இவர் சுப்பிரமணியபுரம் பகுதியில் நடந்து சென்றபோது ஒரு வாலிபர் ரூ.500 கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என கூறி அழைத்தாராம். ராஜா அவரை விட்டு விலகியபோதும் விடாது அவர் தொந்தரவு செய்ததாக சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதன்பேரில் போலீசார் விரைந்து செயல்பட்டு அந்த வாலிபரை கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் கார்த்திக் என்றும், வீட்டில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்யும் புரோக்கர் என்றும் தெரியவந்தது.
அவர் கொடுத்த தகவலின் பேரில் அந்த பகுதியில் ஒரு வீட்டில் இருந்த ஜோதி என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் பைக்காரா பகுதியில் ரூ.200 கொடுத்தால் ஜாலியாக இருக்கலாம் என கூறிய இருவர் குறித்து ஆனந்த் என்பவர் சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார்.
இதனை தொடர்ந்து தத்தனேரியை சேர்ந்த செந்தில்முருகன், திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த முருகன் ஆகிய புரோக்கர்களை கைது செய்த போலீசார், பைக்காரா பகுதியில் ஒரு வீட்டில் இருந்த சரோஜா, ராணி, ஆனந்தி ஆகிய 3 பெண்களையும் கைது செய்தனர்

0 comments: