Monday, August 25, 2014

On Monday, August 25, 2014 by Unknown in ,    
மதுரை கோ.புதூர் பகுதியில் புதுப்படங்கள் மற்றும் ஆபாச படங்களின் சி.டி.க்கள் புழக்கத்தில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.
கூடல்நகரைச் சேர்ந்த முபாரக் என்பவரது கடையில் சோதனை நடத்தியபோது அங்கு உரிமம் பெறப்படாத புதுப்படங்கள் மற்றும் ஆபாச சி.டி.க்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அங்கிருந்து 17 புதுப்பட சி.டி.க்களையும், 5 ஆபாச சி.டி.க்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முபாரக் கைது செய்யப்பட்டார்.
இதேபோல் அதே பகுதியில் பரமசிவம் என்பவரது கடையிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்து 26 புதிய படங்களின் சி.டி.க்களை பறிமுதல் செய்த போலீசார் பரமசிவத்தையும் கைது செய்தன

0 comments: