Saturday, August 30, 2014

On Saturday, August 30, 2014 by farook press in ,    
ஊத்துக்குளியில் மதுபான கடையில் ஏற்பட்ட தகராறில் மது பாட்டிலால் குத்தி டிரைவர் படுகொலை செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரின் மகன் மகேஷ்குமார் (வயது 35), இவர் டிரைவராக வேலை செய்து வந்தார். குன்னத்தூர் சத்தியாநகரை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் ராஜா (35). இவர் வெல்டிங் தொழில் 
ஊத்துக்குளி ரெயில் நிலையம் அருகே உள்ள மதுபான கடையில் நேற்று மதியம் மகேஷ்குமார், ராஜா ஆகிய இருவரும் மது குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்ட தாக தெரிகிறது.
இதில் ஆத்திரம் அடைந்த ராஜா மது பாட்டிலை எடுத்து உடைத்து மகேஷ்குமாரின் கழுத்தில் குத்தினார். இதில் மகேஷ்குமார் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஊத்துக்குளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் ஊத்துக்குளி இன்ஸ்பெக்டர் செல்வதங்கம் மற்றும் போலீசார் விரைந்து வந்து ராஜாவை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் தொடர்ந்து வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த படுகொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இறந்து போன மகேஷ்குமாருக்கு பிரியா (28) என்ற மனைவியும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

0 comments: