Saturday, August 30, 2014

On Saturday, August 30, 2014 by farook press in ,    
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அ.இ.அ.தி.மு.க.வின் பொதுசெயலாளராக தொடர்ந்து 7-ஆவது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதை முன்னிட்டு கழக தொண்டர்கள் காங்கயம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் முன் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர் . இதில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் செல்வி முருகேசன் , மாவட்ட கவுன்சிலர் டி.ஆர். கோவிந்தசாமி, மைனர் பழனிசாமி, ஏ.பி.துரைசாமி தலைவர் காங்கயம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, நிலவள வங்கி தலைவர் பி.பாலசுப்ரமணி, ஏ.ஏ.பழனிசாமி, தமிழரசு, மகேஷ்குமார், ஈஸ்வரன், திருசெந்தில், இளங்கோ, வேலுசாமி, தங்கமுத்து, ராஜ் மற்றும் கழக தொண்டர்கள் கலந்துகொண்டனர்


0 comments: