Saturday, August 30, 2014

On Saturday, August 30, 2014 by Unknown in ,    
Displaying CB24_KANJA_GD02F3DU_510596e.jpg



உடுமலை அருகே, இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 5.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
உடுமலையை அடுத்துள்ள தேவனூர்புதூரில் வெள்ளிக்கிழமை காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் அவ்வழியாக வந்த ஒருவரைப் பிடித்து சோதனை நடத்தினர்.
அதில், அந்த நபர் வாகனத்தில் வைத்திருந்த பையில் 5.5 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அவர் தேவனூர்புதூர் அருகில் உள்ள மயிலாடும்பாறை கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் சதாசிவம் (47) என்பது தெரிய வந்தது.
அவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments: