Saturday, August 30, 2014

On Saturday, August 30, 2014 by Unknown in ,    
Displaying IMG_0430.bmp

உடுமலை, : உடுமலை அருகே புதிதாக அமைக்கப்பட்ட வனத்துறை செக்போஸ்ட் செப்டம்பர் 1ம் தேதி முதல் செயல்பட துவங்கும் என வனத்துறை அறிவித்துள்ளது.
உடுமலை அருகே 9/6 செக்போஸ்ட் உள்ளது. வனத்துறைக்கு சொந்தமான இந்த செக்போஸ்ட் வழியாக கேரள மாநிலத்தில் இருந்து தமிழ்நாடு வரும் வாகனங்கள், இங்கிருந்து கேரளா செல்லும் வாகனங்கள் பதிவு செய்து விட்டுத்தான் செல்ல வேண்டும். இந்நிலையில், பதிவுக்காக வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் அருகில் உள்ள அமராவதி அணைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.
 அதை தவிர்க்க அந்த இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ஏழுமலையான் கோயில் சுற்று பகுதியில் ரூ.11 லட்சம் மதிப்பில் புதிய செக்போஸ்ட் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வசதிகளுடன் கூடிய இந்த செக்போஸ்ட் கட்டும் பணி முடிந்து மாதக்கணக்கில் செயல்படாமல் கிடந்தது. மேலும் செக்போஸ்ட் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 
இதனை தொடர்ந்து இந்த செக்போஸ்ட் செப்டம்பர் 1ம் தேதி முதல் செயல்படும் என வனத்துறை அறிவித்துள்ளது. இதனால் உடுமலை வனச்சரக பகுதியில் வன குற்றங்கள் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments: