Saturday, August 23, 2014

On Saturday, August 23, 2014 by TAMIL NEWS TV in ,    

கோரிக்கை மனு
இதுகுறித்து தடப்பள்ளி–அரக்கன்கோட்டை–பவானி நதி பாசன விவசாயிகள் சங்க தலைவர் தளபதி தமிழக வருவாய்த்துறை அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:–
மாநில அளவில் 1,267 உள்வட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு உள்வட்டத்திற்கும் ஒரு நில அளவர்கள் (சர்வேயர்) நியமிக்கப்பட வேண்டும். ஆனால் தமிழகத்தில் 1,267 உள்வட்டத்திற்கு 800–க்கும் குறைவான நில அளவர்கள் உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபிசெட்டிபாளையம், பெருந்துறை, சத்தியமங்கலம், அந்தியூர், பவானி ஆகிய தாலுகாக்களில் மொத்தம் 35 உள்வட்டங்கள் உள்ளன. மாவட்டத்தில் சுமார் 20 நில அளவர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகிறார்கள்.
நில அளவர்கள்
விவசாயிகளுடைய நிலம் சார்ந்த பிரச்சினைகள், நீர் வழித்தடங்களில் உள்ள பிரச்சினைகள் அதிகமாக உள்ளது. நில அளவர்கள் குறைவான எண்ணிக்கையில் உள்ளதால் நில அளவீடு பணிகளுக்கு விவசாயிகள் பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள வாய்க்கால்கள், ஏரிகள், குளங்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பில் உள்ளன. அவற்றை நில அளவீடு (சர்வே) செய்து “அளவீடு கற்கள்“ நட வேண்டும். நில அளவீடு செய்வதற்கு புவியியல் தொழில்நுட்பம் (ஜி.பி.எஸ்.), சி.ஸ்டார் எனப்படும் தொழில்நுட்பம் என பல்வேறு தொழில்நுட்பங்கள் உள்ளன. புவியியல் தொழில்நுட்ப கருவிகள் ஈரோடு மாவட்ட நில அளவர் அலுவலகத்திற்கு வழங்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. இந்த முறையை பயன்படுத்தி நில அளவீட்டு பிரச்சினையை சரிசெய்ய வருவாய்த்துறை முயற்சி செய்ய வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள நில அளவர்களின் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டு உள்ளது.

0 comments: