Wednesday, August 20, 2014

On Wednesday, August 20, 2014 by Unknown in ,    







திருப்பூர், : திருப்பூர் பகுதியில் பெண்களை கேலி செய்த நைஜீரிய வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
திருப்பூர் ராயபுரம் தெற்கு பகுதியில் நைஜீரிய வாலிபர்கள் தங்கி செகன்ட் பீஸ் பனியன் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் வேலைக்கு சென்று வரும் பெண்களை நைஜீரிய வாலிபர்கள் கேலி, கிண்டல் செய்தும் தொந்தரவு கொடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று சில பெண்களை இவர்கள் மிகவும் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், நைஜீரிய வாலிபர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு நைஜீரிய வாலிபர்  ஒரு பெண்ணை அடித்து ஓடி விட்டதாகவும் கூறப்படுகிறது. 
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அங்கிருந்த 6 நைஜீரிய வாலிபர்களையும் திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் நைஜீரிய வாலிபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments: