Friday, August 08, 2014

On Friday, August 08, 2014 by Unknown in , ,




திருப்பூர்  ஆக 2:   திருப்பூர்  உடுமலை  ஆன்மீக  சுற்றுலா  மையமாக  விளங்கும்  திருமூர்த்தி  மலையில்  மும்மூர்த்திகள்  சிவன் , பிரம்மா  விஷ்ணு , அருள்  பலிக்கும்  இடமாக  விளங்குகின்றது . ஆடிப்பெருக்கு  அமாவாசை  போன்ற  தினங்களில்  பக்தர்கள்  லட்சக்கணக்கான  மக்கள்  கூடும்  இடத்தை  மாவட்ட  நிர்வாகம் , சுற்றுலாத்துறை  சார்பில்  ஆடிப்பெருக்கு விழா  முதல்வர்  செல்வி .ஜெ .ஜெயலலிதா  அவர்கள் . 2013. ம்  ஆண்டு  உத்தரவுப்படி 2 ம்  ஆண்டும்  மாவட்ட  ஆட்சிதலைவர் கு . கோவிந்தராஜ் . தலைமையில்  கொண்டாடப்பட்டது . விழாவில்  பள்ளி  மாணவ  மாணவியரின்  பல  வகையான கலைநிகழ்ச்சிகள்  நடைபெற்றது .  அரசுத்துறை  சார்பாக  அரங்குகள்  அமைத்து  சிறந்ததாக  தேர்வு  செய்யப்பட்டு  வேளாண்மை துறை  முதலிடம்  பிடித்தது  இரண்டாம் இடம்  வனத்துறை  பெற்றது , விழாவில்  கையுறு ,இழுத்தல்  கபாடி  ,வலுக்கமரம்  ஏறுதல் , உள்ளிட்ட  போட்டியில்  வெற்றி  பெற்றவர்களுக்கு  பதக்கமும்  சான்றிதள்களும்  பரிசும்  வழங்கப்பட்டது , வருவாய்துறை  சார்பில்  வீட்டு  மனை  பட்டா 74 பேர்களுக்கும்  ஆதிதிராவிட  நலத்துறை  மூலம்  வீட்டுமனைபட்டா 25 பேர்களும்  கல்வி  உதவித்தொகை 98பேர்களுக்கும்  திருமண  உதவித்தொகை  14 பேர்களுக்கும்  இயற்கை  மரணம் 19 பேர்களுக்கும்  புதிய    குடும்ப அட்டை 145 பேர்களுக்கும்  சுய  உதவிகுழுக்கள் 8  தோட்டக்கலை  மூலம்  பயன்  பெற்றவர்கள் 14 பேர்  வனத்துறை  மூலம் பயனாளிகள் 20 பேர்  மொத்தம்  424 பேர்களுக்கு  ரூபாய் . 84.66.435/. மதிப்பிலான நலத்திட்டங்களை   பொள்ளாச்சி  வ . ஜெயராமன்  சட்டப்பேரவை  துணைத்தலைவர்  சி . சண்முகவேல்  சட்டப்பேரவை உறுப்பினர்  மாவட்ட  ஆட்சித்தலைவர்  கு . கோவிந்தராஜ்  நலத்திட்டங்களை  வழங்கினார் . விழா  ஏற்பாடுகள்  மாவட்ட  நிர்வாகம்  மற்றும்  உடுமலை  கோட்டாட்சியர்  குணசேகரன்  வட்டாட்சியர்  சைபுதீன்  மற்றும்  வருவாய்துறை  அதிகாரிகள்  விழா  ஏற்பாடுகள்  செய்திருந்தனர் .