Wednesday, August 20, 2014

On Wednesday, August 20, 2014 by farook press in ,    

திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.ஜெயலலிதா பேரவையின் சார்பில் 4-வது வார 'மக்கள் முகாம் பல்லடம் ரோடு, தட்டான்தோட்டம் பகுதியில்நடைபெற்றது.கூட்டத்துக்கு மாவட்ட பேரவை துணை செயலாளர் குட்டி என்கிற தங்கவேல் தலைமை தாங்கினார். மாவட்ட பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநகர் மாவட்ட கழக செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் பொது மக்களுக்கு  நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:-
தமிழக முதல்வரின் 3 ஆண்டு கால சரித்திர சாதனை திட்டங்களை மக்கள் வசிக்கும் பகுதிகளில் நேரில் கொண்டு சென்று அவரகளுக்கு விளக்கிடும் வகையில் தெருமுனை கூட்டங்கள் மூலமாகவும், துண்டு பிரசுரங்கள் மூலமாகவும் அவற்றை விளக்கிடும் வகையிலும், மேலும் இது போன்ற கூட்டங்கள் நடத்துவது மூலம் மக்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு, கடந்த 3 ஆண்டுகலல் எத்தனை திட்டங்களை மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா   வழங்கினார் என்பதை மக்கள் மறந்திருக்க மாட்டர்கள். தேர்தலில் மக்களிடம் கொடுத்த 54 வாக்குறுதிகளை நிறைவேற்றியும், சட்டமன்ற கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் அறிவிக்கும் பல்வேறு திட்டங்களையும் முழுமையாக நிறைவேற்றி எதிர்கட்சி தலைவர்களும் பாராட்டும் வகையிலும்,இந்தியாவில் எந்த மாநில முதலமைச்சர்களும் செய்திராத சாதனைகள செய்து நல்லாட்சி நடத்தி வருபவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒருவர் மட்டும்தான்.
உணவுக்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில் பாக்கெட்டில் ரூ.5 இருந்தால் போதும் அம்மா உணவகம் சென்று வயிறார இட்லி சாப்பிட்டு வரலாம்.ரூ.8 இருந்தால் சாம்பார் சாதமும், தயிர் சாதமும் சாப்பிட்டு வரலாம்.அதேபோல் ரூ.10 க்கு அம்மா குடிநீர் பாட்டில், அம்மா உப்பு என மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் காய்கறி விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நேரடியாக கொள்முதல் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.20 சதவீதம் தள்ளுபடியில் அம்மா மருந்தகங்கள். தமிழக மக்களின் உரிமை மற்றும் ஜீவாதார பிரச்சனைகளுக்கு நீதிமன்றம் சென்று போராடி மீட்டுத்தந்துள்ளார்.மக்களின் குறைகளை போக்கும் வகையில் மக்கள் மீது அக்கறை கொண்டு அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் இந்தியாவில் முதன்மை முதலமைச்சராக ஜெயலலிதா திகழ்ந்து கொண்டு இருக்கிறார்..
இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார். 
இந்த கூட்டத்தில் துணை மேயர் சு.குணசேகரன், வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான், தெற்கு தொகுதி செயலாளர் தம்பி மனோகரன், 
4-வது மண்டல தலைவர் கிருத்திகா சோமசுந்தரம்,வடக்கு ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் அட்லஸ் சி.லோகநாதன், கலைமகள் கோபால்சாமி,உஷா ரவிக்குமார், ராஜேஷ்கண்ணா, எஸ்.பி.என்.பழனிசாமி, வடக்கு ஒன்றிய பேரவை செயலாளர் எஸ்.எம்.பழனிச்சாமி, டி.பார்த்திபன், ரத்தினகுமார், பகுதி நிர்வாகிகள் ரஞ்சீத்ரத்தினம், விவேகானந்தன், மாரிமுத்து, எம்.ஜி.ஆ.ராமசாமி மற்றும் சார்பு அணி மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், கலந்து கொண்டனர்
முன்னதாக திருப்பூர் பலல்டம் ரோட்டில் உள்ள சந்தைப்பேட்டையில் இருந்து பேரணியாக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில்.புறப்பட்டு டி.கே.டி.பங்க் வழியாக நடந்து சென்று தட்டான் தோட்டம் வந்தடைந்தனர்.பேரணியாக வரும்போது பொதுமக்களிடம்   கட்சி நிர்வாகிகள்  சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை வழங்கினர்

Displaying IMG_2342.jpg
Displaying IMG_2369.jpg
Displaying IMG_2374.jpg
Displaying IMG_2382.jpg
Displaying IMG_2307.jpg
Displaying IMG_2391.jpg
Displaying IMG_2294.jpg

0 comments: