Tuesday, August 19, 2014

On Tuesday, August 19, 2014 by farook press in ,    
முதல்வர் ஜெயலலிதா வழங்கும் திட்டங்களால் மணவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் கூறினார்.
திருப்பூர் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சின்னச்சாமியம்மாள்  மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, கே.எஸ்.சி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் விஜயாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய  4 பள்ளிகளை சேர்ந்த1293  மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா கே.எஸ்.சி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும்,ெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அய்யங்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, அனுப்பர்பாளையம் 
அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளி மாணவர்களுக்கு ரூ.85.31 லட்சம் மதிப்பிலான சைக்கிள்கள் வழங்கும் விழா ஜெயவாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெற்றது.மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் வரவேற்றார். துணை மேயர் சு.குணசேகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கிபேசியதாவது:-
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தரமான கல்வி பெற வேண்டும் என்றும் என்றும், யாரும் படிப்பதை நிறுத்தி விட கூடாது என்பதற்காகவும் இந்த ஆண்டு ரூ.17 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக கல்விக்கு நிதி ஒதுக்கீடுசெய்துள்ளார். விலையில்லா சீருடை, பேக், அட்லஸ் உள்பட 14 வகை பொருட்களை வழங்கி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.
கடந்த 2001- 20006 ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த விலையில்லா மிதி வண்டி திட்டம், இலவச பஸ் பாஸ், மேலும் பொருளாதார தடையால் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதால் பிளஸ் 1 மாணவர்களுக்கு 1500 ரூபாயும், பிளாஸ்  2 படிக்கும் மாணவர்களுக்கு 2000 ரூபாயும் வழங்கி வருகிறார்.முதல்வர்.மாணவர்கள் கணினி மூலம் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக விலையில்லா மடிக்கணினியை வழங்கக்கூடிய மாநிலம் இந்தியாவிலேயே தமிழகம் மட்டும் தான்.தனியார் பள்ளிக்கு இணையாக கல்வி முறையை ஏழை எளிய மக்கள் பெற வேண்டும் என்பதற்காக தான் இப்படிப்பட்ட திட்டங்கள் முதல்வர் ஜெயலலிதா வழங்கி வருகிறார்.ஆங்கில வழிக்கல்வி கூட மாணவர்கள் பெற வேண்டும் என்படதற்காக அரசு பள்ளியில் ஆங்கிலம் கற்பிக்கப்படுகிறது, திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 113 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி கற்பிக்கப்படுகிறது.இன்று கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.முதல்வர் ஜெயலலிதா அளிக்கும் திட்டங்களால் கல்வி கற்கும் மாணவர்கள் எண்ணிக்கை உயர்கல்விக்காக மட்டும் 54 கல்லூரிகளை இந்த ஆண்டில் அம்மா  திறந்திருக்கிறார்.இந்தியாவில் 20 வது இடத்தில் இருந்த தமிழகம் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இன்று கல்வியில் 8 வது இடத்துக்கு வந்துள்ளது. மாவட்ட அளவில் சிறப்பிடம் பெரும் மாணவர்களை சென்னைக்கு ழைத்து ஊக்கப்பரிசுகளையும் முதல்வர் வழங்கி வருகிறார். உங்கள் வாழ்க்கையை நீங்களே சிறப்பாக உருவாக்கி கொண்டு விட வேண்டும். என்பதால் தான்  இதுபோன்ற பரிசுகளை முதல்வர் வழங்குகிறார்.இந்த ஆண்டுக்கு மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட  பள்ளிகளை தரம் உய்யர்த்தி உள்ளார். ஒரே நேரத்தில் 20  ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்களை நியமித்தவர் முதல்வர். நீங்கள் சிறந்த கல்வியை கற்று உயர வேண்டும்.இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
விழாவில் மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம்,துணை தலைவர் ஆனந்தகுமார், ஒன்றிய தலைவர்ஆர்.சாமிநாதன்,மண்டல தலைவர்கள் வி.ராதாகிருஷ்ணன், ஜெ.ஆர்.ஜான், கிருத்திகா சோமசுந்தரம், நிலைக்குழு தலைவர் அன்பகம் திருப்பதி, கணக்கு குழுத்தலைவர் சி.பி.வசந்தாமணி, கல்விக்குழுத்தலைவர் வி.பட்டுலிங்கம், கவுன்சிலர்கள் கே.என்.விஜயகுமார், கே.செல்வம், பள்ளி தலைமை ஆசிரியர்கள் போஜன்,சதாசிவம்,ஆசிரியர்கள் சசிகலா, தேவி, வசந்தாமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.முடிவில் மாவட்ட கல்வி அலுவலர் கரோலின் நன்றி கூறினார்.

திருப்பூர் வடக்கு ஒன்றியம், கணக்கம்பாளையத்த்தில் புதிய ரேசன் கடையை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில், ஊராட்சி ஒன்றிய தலைவர் ஆர்.சாமிநாதன்,வடக்கு ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், கூட்டுறவு சங்கங்களின் தலைவர் வி.எம்.கோகுல் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதி நிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் காலேஜ் பஜார்  கண்காட்சி துவக்க விழா நடந்தது. கல்லூரி தலைவரும்,வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார்.கல்லூரி முதல்வர் நேச்ரல் நான்சி பிலிப், கூட்டுறவு சங்க தலைவர் வசந்தி,செயலாளர் முத்துரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கண்காட்சியில் கல்லூரி மாணவிகள் கடைகள் வைத்து பெண்கள் உபயோகப்படுத்தும் பொருட்களை காட்சிக்கு வைத்து இருந்தார்கள். மொத்தம் மாணவிகளின் சார்பில் 32 ஸ்டால்கள் அமைக்கப்பட்டு இருந்தன.இதில் பெண்களுக்கான பேன்சி பொருட்கள், ஹேன்ட் பேக், காலணிகள், அலங்கார பொருட்கள், கைத்தறி ஆடைகள், பாஸ்ட் புட் வகைகள், பான்பூரி, கட்லட் போன்ற உணவு பொருட்களை தயார் செய்து கண்காட்சியில் வைத்து இருந்தனர்.முடிவில் வணிகவியல் துறை தலைவர் புனிதா நன்றி கூறினார்.


0 comments: