Tuesday, August 19, 2014

On Tuesday, August 19, 2014 by TAMIL NEWS TV in ,    

விநாயகர் சதூர்த்தி விழாவையொட்டி ஈரோடு மாவட்ட கலெக்டர் சண்முகம் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது–
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் விநாயகர் சதூர்த்தி விழாவின் போது களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பூஜை செய்த பிறகு நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம்.
ஆனால் சில ஆண்டு களாக ரசாயண வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலை களை நீர் நிலைகளில் கரைப்பதால் நீர் நிலைகள் மாசபடுகின்றன.
எனவே பொதுமக்களுக்கு கீழ்கண்ட வேண்டுகோள் விடப்படுகிறது.
களி மண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும் மற்றும் எந்த வித கலவரையற்ற கிழங்கு மாவு மற்றும் மரவள்ளி கிழங்கிலிருந்து தயாரிக்கப்படும் ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவுகள் போன்ற சுற்று சூழல் பாதிக்காத மூலப் பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இந்த வகை சிலைகளை பாதுகாப்பாக நீர் நிலைகளில் கரைக்க முடியும். ரசாயண வர்ணம் (பெயிண்ட்) பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் அரசு அறிவிக்கும் இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும் என கேட்டு கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

0 comments: