Friday, August 29, 2014

On Friday, August 29, 2014 by Unknown in    



இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்திக்கு முக்கிய இடம் உண்டு. ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாளில் விநாயகர் சதுர்த்தியை மக்கள் உற்சாகமாக கொண்டாடுகின்றனர். இந்த நாளில், விநாயகப் பெருமான் வீற்றிருக்கும் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்துவதுடன், விநாயகப் பெருமானின் பல்வேறு தோற்றங்கள் கொண்ட சிலைகளை அவரவர் தகுதிக்கேற்ப பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்படுகிறது. 

மேலும் விநாயகருக்குப் பிடித்த அவல், பொரி, கடலை, சுண்டல், கொழுக்கட்டை, கரும்பு, சோளம் மற்றும் பழ வகைகள் வைத்து படையலிட்டு அவரது அருளை பெறுவது வழக்கம். பின்னர் அந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா வழக்கமான உற்சாகத்துடன் இன்று காலை முதலே கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. 

கிராமப்புறங்களை விட நகரப்பகுதிகளில் விநாயகர் சிலைகள் மற்றும் பூஜைப் பொருட்கள் விற்பனை அதிகமாக காணப்படுகிறது. விநாயகர் சிலைகளை வாங்க கூட்டம் அலை மோதுகிறது. பெரும்பாலான தெரு முனைகளில் பெரிய பெரிய விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. 

கடைகள், அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் வைக்கக் கூடிய சிறிய பிள்ளையார் சிலைகள் அதிக அளவில் விற்பனை ஆகின்றன. 

விநாயகர் சதுர்த்தியையொட்டி முதல்வர் ஜெயலலிதா, பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

0 comments: