Wednesday, August 06, 2014

On Wednesday, August 06, 2014 by TAMIL NEWS TV in , , ,

தி யுனிக் அகெடமி, ஈங்கூர், பெருந்துறை

      ஒழுக்கம், அன்பு, சகோதரத்துவம், நல்லறிவு, அரவணைப்பு, பண்பாடு, கலாச்சாரம், மும்மொழித்திட்டம், கலைகளைப் பாடமாகவே பயிலும் முறை, பல்வேறு துறை சார்ந்த அறிவுகள், நன்னெறிக்கல்வி, வாழ்க்கைக் கல்வி, விளையாட்டிற்கே ஒரு தனிப்பாடத்திட்டம் என மனநலமும் உடல்நலமும் இணைந்ததே நற்கல்வி என அறியப்பட்டு ICSE & ISC பாடத்திட்டத்தை தேர்ந்த்தெடுத்து நாமக்கல், தருமபுரி, திருப்பூர், ஈரோடு என நான்கு மாவட்டங்களிலும் உள்ள ஒரே பள்ளியாக தி யுனிக் அகெடமி, ஈங்கூர், பெருந்துறை, ICSE & ISC பள்ளி அங்கிகாரத்தோடு 1999 ஆம் ஆண்டு முதல் சீரும் சிறப்புமாக செயல்பட்டு வருகிறது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
      அவ்வகையில் ICSE & ISC பாடத்திட்டக்குழு பல்வேறு பன்முகத்திறன்களை வளர்த்து வருகிறது.
      அவற்றில் ICSE & ISC யின் கீழ் உள்ள தமிழ்நாடு மண்டல விளையாட்டுத்துறை இயக்குனரகம் ASISC யின் 2014 -2015 ஆம் ஆண்டிற்கான விளையாட்டு மற்றும் தடகளப் போட்டிகளை நடத்த தி யுனிக் அகெடமி, ஈங்கூர் பள்ளியை தேர்வு செய்தது.
      இப்போட்டிகளின் முதல் நிகழ்வாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அளவில் ICSE பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி கடந்த ஜூன் மாதம் 27.06.2014, 28.06.2014 இரண்டு நாட்கள் நடைபெற்றது.
      இப்போட்டியில் 13 அணிகள் பங்கு கொண்டு நாக் அவுட் முறையில் சர்வதேச விதிமுறைகளைப் பின்பற்றி விளையாடி சென்னை செட்டிநாடு ஹரிஸ்ரீ வித்யாலயா பள்ளி , வாகை சூடியது. இந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடிய 20 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு டிசம்பர் மாத இறுதியில் இந்திய விளையாட்டு வீரர்களைச் சந்திக்கவும் அவர்கள் முன்னிலையில் 10 நாட்கள் பயிற்சியளிக்கவும் ஏற்பாடு செய்ததை இப்பள்ளியின் நிர்வாக இயக்குனரும், மாநில கிரிக்கெட்  வீரருமான திரு. அஸ்வின் அவர்கள் தெரிவித்தார்.
      இவ்வகையில் இப்போட்டியின் இரண்டாம் நிகழ்வாக தடகள போட்டிகள் வருகிற ஆகஸ்டு மாதம் 8–8-2014, 9–8–2014 அன்று ஈரோடு வா.உ.சி பூங்காவில் உள்ள விளையாட்டரங்கில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலிருந்து ICSE & ISC  அங்கீகாரம் பெற்ற 36 பள்ளிகளிலிருந்து 650 மாணவர்கள் பங்குகொண்டு இத் தடகளப் போட்டிகள் நடைபெறுகிறது என்றும், இதற்கான முழுப்பணிகளும் முழு வீச்சில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
      இதன் தொடர் நிகழ்வாக 5.8.2014 இன்று தி யுனிக் அகெடமி ஈங்கூர் பள்ளியிலிருந்து சென்னிமலை காவல்துறை ஆய்வாளர் C.வேலுமணி அவர்களால் காலை 8.30 மணி அளவில் ஜோதி ஏற்றப்பட்டு தொடரோட்டமாக பெருந்துறை, வாய்கால் மேடு, திண்டல், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக ஈரோடு வ.உ.சி மைதானத்திற்கு கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி 5.8.2014 இன்று ஈங்கூரிலிருந்து திண்டல் வரையும் 6/8/2014 நாளை திண்டலிருந்து ஈரோடு செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது.
      ஈரோடு, வ.ஊ.சி பார்க் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் தடகளப் போட்டிகள் வகையில் இளையோர் பிரிவில் ஆண்கள், பெண்கள், மூத்தோர் பிரிவில் ஆண்கள், பெண்கள் என பிரிக்கப்பட்டு 100மீ, 200மீ, 400மீ, 800மீ, 1500மீ ஓட்டம், 4 x 100மீ தொடரோட்டம், 3கி.மீ, 5கி.மீ நடைபோட்டி, உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டெறிதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல் போன்ற 54 வகை போட்டிகள் நடைபெறுகின்றன.
      மேலும் பள்ளியின் நிர்வாக இயக்குனர் அஸ்வின் கூறுகையில் தனது சொந்த மாநிலத்திலேயே பல்வேறு தரப்பில் திறன்களை ஊக்குவித்து மேலும் தன்னை விளையாட்டில் மேம்படுத்தி மாணவர்கள் வாழ்வில் உயர வேண்டும் என்பதே இதன் தலையாய நோக்கம் என்றும், இப்போட்டிகளில் அதிகபுள்ளிகளைப்பெற்ற பள்ளிக்கும் அதிகப்புள்ளிகளை பெற்ற தனிவிளையாட்டு வீரர்களுக்கும், கேடயமும் பரிசும் வழங்கப்படும். மேலும் இதை நேரடியாக பார்க்கும் வகையில் 14 x 10 LED திரையும், HD வீடியோக்கள் (ம) புகைப்படக்கருவிகளோடு விளையாட்டரங்கம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
            இப்போட்டியின் ASASISC யின் கீழ் நடக்கும் தடகளப் போட்டிகளின் ஒருங்கிணைப்பளரும் தி யுனிக் அகெடமி பள்ளியின் முதல்வருமான திரு.Dr. காட்வின் டேனியல் அதிர்ஷ்டம் தலைமை தாங்கியும் பள்ளியின் சேர்மன் திரு. இளங்கோ நல்லுரை வழங்கியும் 8-8-2014 அன்று நடைபெறும் போட்டிகளை ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உயர்திரு P.அய்யண்ணன் CEO. M.COM., B.Ed, மாவட்ட முதன்மை துறை காவல் ஆய்வாளர் உயர்திரு. M.R.சிபிசக்கரவர்த்தி IPS அவர்கlள் முன்னிலையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் V.K.சண்முகம் IAS அவர்கள் தலைமையேற்று துவக்கி வைக்கிறார்.மேலும் ஈரோடு மாவட்ட விளையாட்டு அதிகாரி K.கனகராஜ் B.A. NIS அவர்கள், மாவட்ட உடற்கல்வி முதன்மை இயக்குனர் G.சித்தய்யன் M.A , MPEd , Mphil அவர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

      மேலும்,9.8.2014 அன்று மாலை 4.30 மணி அளவில் ஈரோடு வ.உ.சி.பார்க் விளையாட்டரங்கில் பரிசளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக திரு S. டேவிசன் தேவாசீர்வாதம் IPS (Inspector general of police ,west zone) அவர்கள், கலந்து கொண்டு பரிசுகளை வழங்கியும் திரு.C.தேவராஜன் B.E (chairman cum managing director – URC INFOTECH),  மற்றும் திரு.G.சக்திவேல் Infra Tex நிறுவனர் அவர்கள் வாழ்த்துரை  வழங்கியும் சிறப்பிக்க உள்ளார்கள்,மேலும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நண்பர்கள், பார்வையாளர்கள், பத்திரிக்கையாளர்கள், தொலைக்காட்சி நண்பர்கள் என திரளாக கலந்து கொண்டு மாபெரும் இவ்விழாவினைச் சிறப்பிக்க உள்ளனர் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்.