Sunday, August 10, 2014

On Sunday, August 10, 2014 by Unknown in ,

அவினாசி ஒன்றியம் செம்பியநல்லூர் ஊராட்சி மகாலட்சுமி நகரில் குடியிருப்புகள் நிறைந்துள்ளன. இந்த பகுதியில் கடந்த 5 மாதங்களாக தண்ணீர் கிடைப்பதில்லை, சாக்கடை வசதி இல்லை. ரோடு மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது.
இதுபோன்ற அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் நேரில் சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. எனவே கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி செம்பியநல்லூர் தி.மு.க. ஊராட்சி செயலாளர் ரமேஷ் தலைமையில் முன்னாள் கவுன்சிலர் சுப்பிரமணியம், பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் 12 பெண்கள் உள்பட 40–க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்த ஊராட்சி தலைவர் ஆறுமுகம், துணைத்தலைவர் குமாரசாமி ஆகியோர் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணாமல் இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம் என்று மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து இன்னும் இரண்டு நாட்களுக்குள் தடையின்றி குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும், குண்டும் குழியுமாக உள்ள ரோட்டை உடனடியாக பராமரிப்பு செய்து சாக்கடை வசதி செய்து தருவதாகவும் உறுதி கூறினர். இதையடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.