Sunday, August 10, 2014

On Sunday, August 10, 2014 by Unknown in , ,
வடபழனி ஆற்காடு சாலையில் பிக்பஜார் உள்ளது. இதற்கு வெளியே 1½ வயது ஆண் குழந்தை ஒன்று நேற்று மாலை அனாதையாக நின்று கொண்டிருந்தது. நீலகலரில் ஜீன்சும், சிவப்பு கலரில் கட்டம் போட்ட சட்டையும் அணிந்து இருந்தான்.
வடபழனி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் காமாட்சி அந்த பகுதி வழியாக சென்றபோது குழந்தை அனாதையாக நின்றதை கண்டறிந்தார். இதுகுறித்து அவர் அங்கு விசாரித்தபோது அங்கிருந்தவர்கள் குழந்தை யார் என்று தெரியாது என்று கூறினார்.
உடனே அவர் குழந்தையை எடுத்துக்கொண்டு மாலை 4.30 மணி அளவில் வடபழனி போலீஸ் நிலையத்துக்கு சென்றார்.
அந்த குழந்தை பற்றிய தகவல்கள் ஒலிபெருக்கி மூலம் தெரிவிக்கப்பட்டது. இரவு 10.30 மணி வரை குழந்தையை தேடி யாரும் வரவில்லை.
இதைத்தொடர்ந்து செனாய் நகரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இரவில் அந்த குழந்தைக்கு பால், பிஸ்கட் கொடுக்கப்பட்டது.
அந்த குழந்தையை அதன் உரியவரிடம் ஒப்படைக்க சப்–இன்ஸ்பெக்டர் காமாட்சி வாட்ஸ்அப், பேஸ்புக் மூலம் தனக்கு தெரிந்த 300 நபர்களுக்கு தகவல் அனுப்பினார். ஆனால் இதுவரை அந்த குழந்தைக்கு யாரும் சொந்தம் கொண்டாட வரவில்லை.
இந்த குழந்தை பற்றி தகவல் அறிந்தவர்கள் வடபழனி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்குமாறு (044–23452635) அறிவிக்கப்பட்டுள்ளது.