Tuesday, August 12, 2014

On Tuesday, August 12, 2014 by Unknown in ,

கிருஷ்ணதேவராயர் ஆட்சியில் பழநி முருகன் கோயிலில் பட்டியல் இனத்தவருக்கு அளிக்கப் பட்ட உரிமைகளை தெரிவிக்கும் செப்பேடு தற்போது தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன் வசம் இருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி ‘தி இந்து’ நாளிதழில் மேற்கண்ட செப்பேடு குறித்த கட்டுரை வெளியானது. அதில் கடந்த 95ம் ஆண்டு ‘தி இந்து’ஆங்கில நாளிதழில் வெளியான கட்டுரையை சுட்டிக்காட்டி, அதன் அடிப்படையில் தற்போது மதுரை அருங்காட்சியகத்தில் பட்டியல் இனத்தவரின் உரிமைகளை நிலைநாட்டும் செப்பேடு இல்லை என்று செய்தி வெளியானது.
இதையடுத்து அந்த செப் பேட்டை தேடி கண்டுபிடிக்க வேண்டும் என தேவேந்திர குல வேளாளர் சமூகப் பிரமுகர்கள் பலர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
இதனிடையே, ‘தி இந்து’-வில் வெளியான செய்தியைப் பார்த்து நம்மை தொடர்பு கொண்ட மதுரை அருங்காட்சியகத்தின் முன்னாள் காப்பாட்சியர் சுலை மான், “பழநியில் இருந்து வந்த சுப்பிரமணியம் மற்றும் சிலுவை முத்து ஆகியோர் 95-ம் ஆண்டு அந்த செப்பேட்டை என்னிடம் கொடுத்து ஆய்வு செய்து, அதில் இருக்கும் தகவல் களை சொல்லும்படி கேட்டுக் கொண்டனர். அதன் அடிப் படையில் ஆய்வு செய்து திரும்ப கொடுத்துவிட்டோம்.” என்றார்.
மதுரை அருங்காட்சியகத்தின் தற்போதைய காப்பாட்சியர் பெரியசாமி, கூறும்போது, “அருங் காட்சியத்தில் தீவிரமாக தேடி யதில் ஒரு கடிதம் கிடைத்துள்ளது. 27.11.95-ம் ஆண்டு காப்பாட்சியர் சுலைமான் எழுதிய அந்தக் கடிதத்தில், ‘தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் தொடர் பான செப்பேட்டை ஆய்வு செய்து, மீண்டும் அது தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் சங்கத்தினரிடம் ஒப்படைக்கப் பட்டுவிட்டது. தொல்பொருள் துறை இயக்குநர் நடனகாசிநாதன் அந்த செப்பேட்டை மீண்டும் ஆய்வு செய்து விரிவான புத்தகம் எழுத விரும்பினார். ஆனால், சம்மந்தப்பட்டவர்கள் அதனைத் தரவில்லை’என்று குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தின் நகல் அரசுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இதையடுத்து, அருங் காட்சியக பணியாளர்கள் பழநி சுற்றுவட்டார கிராமங்களில் விசாரித்ததில் 90 வயது நிரம்பிய சுப்பிரமணியம் என்பவரிடம் கடைசியாக அந்த செப்பேடு இருந் ததாக கூறினார்கள்” என்றார்.
இதையடுத்து சுப்பிர மணியத்திடம் பேசினோம். “அது ஜான் பாண்டியன்கிட்ட கொடுத் ததா ஞாபகம்” என்றார். பின்னர் ஜான் பாண்டியனிடம் கேட்டபோது “ஆமாம். அந்த செப்பேடு என்னுடைய லாக்கரில் பத்திரமாக இருக்கிறது. 97-ம் ஆண்டு பழநியை சேர்ந்த எங்கள் சமூகத்து பிரமுகர்கள் சிலர் பழநி கோயிலில் தங்க ளுக்கு முன்னோர்கள் காலத்தில் இருந்த உரிமைகள் மறுக்கப் படுவதாகவும், உரிமைகள் இருந்த தற்கான ஆதாரமாக அந்த செப்பேட்டையும் கொண்டு வந்து காட்டினார்கள். அவர் களை அழைத்துக்கொண்டு அப்போதைய தமிழக முதல்வ ரான கருணாநிதியிடம் பேசி னோம். செப்பேட்டை ஆர்வமுடன் பார்த்து விசாரித்தவர், உடனடி யாக பழநி கோயிலில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின ருக்கான உரிமையை வழங்கிட உத்தரவிட்டார். அன்று முதல் பழநி கோயிலில் எங்கள் சமூகத்துக் கான உரிமைகள் மீண்டும் கிடைத்தன.
கருணாநிதி அந்த செப்பேட்டை கேட்டார். அரசு வசம் பாதுகாப்பு இருக்குமா என்று தெரியவில்லை. அதனால், நான் மறுத்துவிட்டு, அதனை எனது வங்கி லாக்கரில் பத்திரமாக பாதுகாத்து வருகி றேன். விரைவில் அதை காட்டு கிறேன்” என்றார்.