Tuesday, December 30, 2014

On Tuesday, December 30, 2014 by farook press in ,    

திருப்பூர் போயம்பாளையம் வடிவேல் நகரை சேர்ந்தவர் கலைவாணன் (வயது 38). சம்பவத்தன்று வேலைக்கு செல்ல ரோட்டை கடப்பதற்காக ரோட்டோரம் நின்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள் கலைவாணன் மீது பயங்கர வேகத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கலைவாணன் படுகாயமடைந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கோவையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.
அதேபோல் 15 வேலம்பாளையம் கரிய காளியம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் சுரேஷ் (27). இவர் நேற்று மாலை தனது மோட்டார்சைக்கிளில் வேலம்பாளையத்தில் இருந்து டி.டி.பி. மில் ரோட்டில் வந்துகொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற வேனை முந்த முயன்றார். இதில் எதிர்பாராதவிதமாக எதிரே வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த இரு விபத்துகள் குறித்து போக்குவரத்து நுண்ணறிவு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments: