Tuesday, August 12, 2014

On Tuesday, August 12, 2014 by Unknown in ,
டாஸ்மாக் கடை | கோப்புப் படம்
தமிழக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்ட ஆயத்தீர்வை உயர்வுக்கான சட்ட மசோதாவின் எதிரொலியால், வெளிநாட்டு மதுபான வகைகளின் விலை அதிகரிக்கிறது.
சட்டப்பேரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் தாக்கல் செய்த சட்ட மசோதாவின் விவரம்:
அரசுக்கு கூடுதல் வருமானத்தைப் பெருக்கும் வகையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அயல்நாட்டு மதுபானங்களுக்கு அதிகளவு விதிக்கப்படத்தக்க ஆயத்தீர்வையை சாதாரண வகைகளுக்கு புரூப் லிட்டர் ஒன்றுக்கு ரூ.125-லிருந்து ரூ.250 ஆகவும், நடுத்தர வகைகளுக்கு ரூ.300 ஆகவும், உயர்தர வகைகளுக்கு ரூ.500 ஆகவும் உயர்த்த முடிவுசெய்யப்பட்டுள்ளது என்று அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மசோதாவின் எதிரொலியாக, தமிழகத்தில் வெளிநாட்டு மதுபான வகைகளின் விலை விரைவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.