Sunday, August 10, 2014

On Sunday, August 10, 2014 by Unknown in ,

ஈரோடு வ,உ.சி. மைதானத்தில் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் புத்தக திருவிழா நடந்து வருகிறது. விழாவையொட்டி தினமும் மாலை நடக்கும் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கு பெற்று பேசி வருகிறார்கள்.
நேற்று மாலை நடந்த நிகழ்ச்சியில் பேராசிரியர் இளம்பிறை மணிமாறன் கலந்து கொண்டு ‘‘மண் பயனுற வேண்டும்’’ என்ற தலைப்பில் பேசினார்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சிக்கு சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவர் பி.சி.துரைசாமி தலைமை தாங்கி பேசுகிறார். இயக்குனர் டாக்டர் சாந்திதுரை சாமி முன்னிலை வகித்து பேசுகிறார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டு ‘‘வாழ்க்கை ஒரு வானவில்’’ என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவாற்றி பேசுகிறார்.
முன்னதாக மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வரவேற்று பேசி முடிவில் நன்றி கூறுகிறார்.