Monday, August 11, 2014

On Monday, August 11, 2014 by Unknown in ,

சென்னையில் அமைந்துள்ள 'பெரியார் திடலில்’ யாரும் கூட்டம் நடத்திக்கொள்ளலாம் என்ற நடைமுறை எப்போது முதல் பின்பற்றப்படுகிறது?''

''மெமோரியல் ஹாலில் ஒரு மாநாடு நடத்தத் திட்டமிட்டார் தந்தை பெரியார். 'கடவுள் இல்லை என்று பிரசாரம் செய்பவர்களுக்கு அந்த ஹாலைக் கொடுப்பது இல்லை’ என்று காரணம் சொல்லி மறுத்துவிட்டது ஹால் நிர்வாகம். ஏனெனில், அந்த ஹாலின் நிர்வாகம் கிறிஸ்துவர்களிடம் இருந்தது.

சளைக்காத பெரியார், உடனடியாக பெரியார் திடலில் ஒரு மண்டபத்தைக் கட்டி அதற்கு 'எம்.ஆர்.ராதா மன்றம்’ எனப் பெயர் சூட்டினார். தான் திட்டமிட்ட நாளில் எம்.ஆர்.ராதா மன்றத்தில் மாநாட்டை நடத்தி முடித்த பெரியார், 'யாருக்கும் எந்தக் கருத்தையும் சொல்வதற்கு உரிமை உண்டு. அந்த வகையில் எவரும் தங்கள் கருத்துகளைத் தைரியமாக இந்தப் பெரியார் திடலில் வந்து சொல்லலாம்’ என அன்றே உத்தரவிட்டார். அவருடைய உத்தரவு இன்று வரைக்கும் பின்பற்றப்படுகிறது என்பதற்கு, பெரியார் திடலில் நடக்கும் கிறிஸ்துவப் பிரசாரக் கூட்டங்களே உதாரணம்!''

- அ.யாழினி பர்வதம்,Oviya Selvan