Friday, August 29, 2014

On Friday, August 29, 2014 by Unknown in ,    
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தச்சநல்லூரை சேர்ந்தவர் வருண் தேவன் (வயது 48). இவர் கோவை அருகேயுள்ள பல்லடம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்தார். இவரது வீடு பல்லடம் – மங்களம் ரோட்டில் அம்மாபாளையத்தில் உள்ளது.
அலுவலக வேலையாக பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்த வருண் தேவன் மாலை 4.30 மணியளவில் வீட்டுக்கு தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
அம்மாபாளையம் பிரிவு அருகில் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் வருண் தேவனின் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் பலத்த காயமடைந்த வருண் தேவன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
அந்த வழியாக சென்றவர்கள் வருண் தேவனை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலனின்றி ஏட்டு வருண்தேவன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்ததும் பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ்குமார், பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமண தாஸ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பல்லடம் போலீசார் ஏட்டு வருண் தேவன் மீது மோதிவிட்டு சென்ற வாகனம் எது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 comments: