Friday, August 29, 2014

On Friday, August 29, 2014 by Unknown in ,    
மதுரை தல்லாகுளம் போலீஸ் சரகத்துக்குட்பட்ட இந்திரா நகர் 2–வது தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி சத்தியா (வயது 26) இவர்களுக்கு 3 வயதில் மணிகண்டன் என்ற குழந்தை உள்ளது.
இந்நிலையில் கடந்த 21–ந்தேதி மதுரை ஆண்டாள் புரத்தில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சத்தியா, தனது மகனை அழைத்துக் கொண்டு சென்றார்.
நீண்ட நேரமாகியும் சத்தியா வீடு திரும்பவில்லை. இதையடுத்து பதறிப்போன பாலசுப்பிரமணியன் தனது மனைவி, மகனை பல இடங்களில் தேடிப் பார்த்தார். ஆனால் எங்கும் கிடைக்க வில்லை.
மதுரை தொழிற்பேட்டை பகுதியில் உள்ள சங்கர் நகரில் தனியாக வசித்து வருபவர் ஆயிஷாமரியம் (வயது 60). சம்பவத்தன்று வெளியே சென்ற இவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
மேற்கண்ட சம்பவங்கள் குறித்து தல்லாகுளம் போலீசில் புகார் கூறப்பட்டு உள்ளது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசு வழக்குப்பதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகிறார்.

0 comments: