Monday, August 25, 2014

On Monday, August 25, 2014 by Unknown in ,    

தினமும் பெற்றோரை வணங்கிய பின் தனது பணிகளைத் தொடங்குபவர்களுக்கு வாழ்க்கையில் எல்லாப் பெருமைகளும் வந்து சேரும் என, மதுரை காமராஜர் பல்கலைக்கழகக் கல்லூரி முதல்வர் எம். ராஜீயகொடி தெரிவித்தார்.
அழகர்கோவில் அருகிலுள்ள லதா மாதவன் பாலிடெக்னிக் கல்லூரியில் 16ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், 329 மாணவ- மாணவியர்களுக்குப் பட்டம் வழங்கி அவர் மேலும் பேசியது:
பலருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் தொழில்முனைவோர்களாக மாணவ, மாணவியர் வரவேண்டும். வேலைத் தேடி அலையும் நபராக இருக்கக் கூடாது. பறவைகள் அதிகாலையிலேயே நீண்ட தொலைவு பறந்து சென்று தங்களுக்குத் தேவையான இரையைப் பெற்று, இருப்பிடம் திரும்புகின்றன. அது போல், சிறந்த மாணவராக உருவாக பறவைகளைப் பார்த்து பழகிக் கொள்ளவேண்டும்.
மாணவர்கள் தினமும் தங்களது பெற்றோரை கடவுளாக நினைத்து வணங்கினால், வாழ்க்கையில் அனைத்து நலன்களையும் பெற்றுத் திகழலாம். அதேபோன்று, நமது தேசத்தையும் மதிக்கவேண்டும் என வலியுறுத்தினார்.
கல்லூரி நிறுவனத் தலைவர் டத்தோ டாக்டர் கே. மாதவன் தலைமை வகித்தார். லதா மாதவன் பாலிடெக்னிக் முதல்வர் தவமணி வரவேற்றார்.
கல்லூரியின் மின்னணுவியல் துறை மாணவர் எஸ். ஜலால் முதலிடத்தையும், வி. அருண்பாண்டி இரண்டாமிடத்தையும் மற்றும் இயந்திரவியல் துறையில் ஜெ. ஜெகன்நாத் பிரபு மூன்றாமிடத்தையும் பெற்றிருந்தனர். இம்மாணவர்கள் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.
விழாவில், லதா மாதவன் கல்விக் குழும இயக்குநர் எஸ். சேதுபதி, பொறியியல் கல்லூரி முதல்வர் மாரிமுத்து, மெட்ரிக். பள்ளி முதல்வர் மணி சுரேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டன

0 comments: