Thursday, August 14, 2014

On Thursday, August 14, 2014 by Unknown in ,    
வழிப்பறி தொடர்பான வழக்கில், மதுரை திமுக பிரமுகரான முன்னாள் மண்டலத் தலைவர் வி.கே. குருசாமி நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தார்.
தல்லாகுளம் போலீஸார் இவ்வழக்கை பதிவு செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி இரவு, தல்லாகுளம் பகுதியில் ரோந்து சென்றபோது, காருடன் நின்ற சிலர் போலீஸாரை கண்டதும் ஓடியுள்ளனர். அவர்களில், அனுப்பானடியைச் சேர்ந்த முத்துப்பாண்டி, பாலமுருகன், கருப்பசாமி ஆகிய 3 பேர் பிடிபட்டனர். அவர்கள் தனியே வருவோரிடம் வழிப்பறி செய்ய திட்டமிட்டு இருந்ததாகத் தெரிவித்தனர்.
மேலும், தப்பியோடியவர்கள் என திமுக முன்னாள் மண்டலத் தலைவர் வி.கே. குருசாமி, குமார், காளி ஆகியோரை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், வி.கே. குருசாமி மதுரை இரண்டாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தார். பின்னர், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

0 comments: