Saturday, August 23, 2014

On Saturday, August 23, 2014 by TAMIL NEWS TV in ,    
காங்கிரஸ் தலைமையுடனான கருத்து வேறுபாடு காரணமாக 1996-ம் ஆண்டு அக்கட்சியை விட்டு வெளியேறிய ஜி.கருப்பையா மூப்பனார், தமிழ் மாநில காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கினார். தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து அந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் 19 இடங்களில் வெற்றி பெற்றது. பின்னர், 2002-ம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் தாய்கட்சியான காங்கிரசுடன் இணைந்தது.

தற்போது, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தகுதியை பெறக்கூட முடியாதபடி கடுமையான தோல்வியை சந்தித்துள்ள காங்கிரஸ் கட்சி இனி தமிழகத்தில் தலை தூக்கவே முடியாது என்று தொண்டர்கள் சோர்ந்துப்போய் உள்ளதாகவும், இந்த சோர்வைப் போக்க மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் அளிக்க முன்னாள் மத்திய மந்திரியும் காலஞ்சென்ற  ஜி.கருப்பையா மூப்பனாரின் மகனுமாகிய ஜி.கே.வாசன் முயற்சித்து வருவதாகவும் சில யூகங்கள் உலவி வந்தன.

இது தொடர்பாக, நேற்று ஈரோடு மாவட்டத்துக்கு வந்திருந்த ஜி.கே.வாசனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், ’ஊடகங்கள் பெரிதுபடுத்துவதுபோல் அந்த யூகங்களில் சிறிதளவும் உண்மை இல்லை’ என்று கூறினார்.

0 comments: