Tuesday, August 26, 2014

On Tuesday, August 26, 2014 by Unknown in ,    
சூர்யா. வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் மாஸ் திரைப்படத்தில் வழக்கம்போல யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைப்பாளர்.


 நயன்தாரா மற்றும் ஏமி ஜாக்சன் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு அதிசய சக்திகள் இருக்கிறதாம். யார் கண்களுக்குமே தெரியாத ஸ்ரீமன், கருணாஸ், டேனியல் ஆகியோர் சூர்யாவின் கண்களுக்கு மட்டும் தெரிவார்களாம். 

இப்படி சூர்யாவுக்கு இருக்கும் சக்தியை வைத்து இவர்கள் நால்வரையும் சுற்றிய காமெடி கதை தான் மாஸ் படம் என்கின்றனர் படக்குழுவிற்கு நெருக்கமானவர்கள். காமெடி கதையாக இருந்தாலும், ஆங்காங்கே அதகளமான ஆக்‌ஷன் காட்சிகள் வைக்கப்பட்டு, பக்கா கமெர்ஷியல் படமாக உருவாகுமாம் மாஸ். மேலும் ஹீரோயின்களான ஏமியும், நயனும் இந்த படத்தில் சில ஆக்‌ஷன் காட்சிகளில் நடிப்பதாகவும் பேசப்படுகிறது. 

0 comments: