Thursday, August 07, 2014

On Thursday, August 07, 2014 by Anonymous in
murugadoss_kothapaya_rajapaksa_001








தமிழ் சினிமா கலைஞர்கள் எப்போதுமே அரசியல் தலைவர்களுக்கு ஆதரவாக இருப்பர்.
அந்தவகையில் சமீபத்தில் இலங்கை இணையதளம் தமிழக முதல்வரை தவறாக சித்தரித்து இருந்ததால் தமிழ் திரையுலகம் முழுவதும் இணைந்து இலங்கைக்கெதிராக இன்று போராட்டம் நடத்தியது.
இலங்கை தூதரகத்தை மூடச்சொல்லி நடந்த இந்த போராட்டத்தில் நடிகர் விஜய், சூர்யா உட்பட பல முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் கோத்தபய ராஜபக்சே பெயரை அழுத்தமாக சொல்லி கெட்டவார்த்தை போல திட்டினார்.
கத்தி படத்தின் தயாரிப்பு நிறுவனம் ராஜபக்சேவுக்கு நெருக்கமானது என்று கூறிவருவதால் முருகதாசுக்கு பிரச்சனை வலுத்துவரும் நிலையில் இவரின் பேச்சு இதற்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.