Monday, August 25, 2014

On Monday, August 25, 2014 by Unknown in ,    
 நிலம் கையகப்படுóத்த திருச்சி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ராணி மங்கம்மாளின் படைத் தளபதியின் வாரிசு தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
திருச்சியைச் சேர்ந்த சுல்தான்கான் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். மனுவில், எனது மூதாதையர் கான்மியான். மதுரையை ஆட்சி செய்த ராணி மங்கம்மாளிடம் படைத் தளபதியாக இருந்தவர். கான்மியானின் தந்தை ஜமீன்தாரராக இருந்தார்.
அவர் 700 குதிரைகளை ராணிக்கு வழங்கினார். அதற்கு பதில் இனாமாக பட்டயமும் நிலமும் ராணி வழங்கினார். 2.57 ஹெக்டேர் அளவுள்ள அந்த நிலம் தற்போதும் திருச்சி வண்டிப்பேட்டை பகுதியில் உள்ளது.
பரம்பரை பரம்பரையாக நாங்கள் அனுபவித்து வந்தோம். தற்போது அந்த நிலத்தில் திருச்சி குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டுவதற்கு கையகப்படுத்த திருச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதனை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி திருச்சி முன்சீப் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். எனது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எனவே, ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இம் மனுவை விசாரித்த நீதிபதி வி.எம்.வேலுமணி, வழக்கில் சம்பந்தப்பட்ட நிலம் அரசுக்குச் சொந்தமானது என்பதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், கீழமை நீதிமன்ற உத்தரவில் தலையிட முடியாது என குறிப்பிட்டு மனுவைத் தள்ளுபடி செய்தார்.

0 comments: