Monday, August 25, 2014

On Monday, August 25, 2014 by Unknown in ,    

திருப்பூர், ஆக. 25-
திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா பேரவை சார்பில் 100 வாரங்கள் நடைபெறும் தமிழக அரசின்  விளக்க  பிரச்சாரம், நன்றி தெரிவிக்கும் தெருமுனை பிரச்சார கூட்டத்தின் 5 வது வார கூட்டம் திருப்பூர் பி.என்.ரோட்டில் உள்ள ராமமூர்த்தி நகரில் நடந்தது. நகர அம்மா பேரவை தலைவர் எவர்கிரீன் சண்முகம் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார். வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், துணை மேயர் சு.குணசேகரன், இசாக், கலைமகள் கோபால்சாமி, ஸ்டீபன்ராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
வனத்துறை அமைசர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசும்போது கூறியதாவது;
தமிழகத்தில் 3 ஆண்டு காலம் நல்ல திட்டங்களை கொடுத்து, சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றி ஒரு சரித்திரம் படைத்திருக்கிறார் அம்மா அவர்கள். இந்த ஆட்சிக்காலத்தில் கொடுத்த அளவுக்கு எந்த காலத்திலும் மக்களுக்கு திட்டங்கள் கொடுக்கப்படவில்லை.
கடந்த 5 ஆண்டுகாலம் நடந்த ஆட்சி மக்களுக்கு துரோகம் செய்த ஆட்சி . அந்த காலத்தில் மக்களுக்கு சொன்ன வாக்குறுதிகளை  நிறைவேற்றவில்லை.கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து ஆட்சியை பிடித்தார்கள். கலர் டி.வியை கொடுத்து வீட்டு குடும்பத்துக்கு வருமானம் வரும் வகையில் கேபிள் கனேக்சனுக்கு பணம் பெற்றனர்.பல லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை கொள்ளையடிக்க திட்டம் கொண்டு வந்தார்கள். அந்த ஆட்சியில் 2 ஏக்கர் நிலம் கொடுப்பதாக சொன்னார்கள்.ஆனால் யாருக்கும் கொடுக்கவில்லை. ஆனால் அம்மா அவர்கள் 54ன் திட்டங்கள் அறிவித்தார்கள். 3 ஆண்டுகள் முடிவடையாத நிலையிலேயே 54 திட்டங்களையும் நிறைவேற்றியவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.
இன்றைக்கு 1.80 கோடி ரேசன் கார்டுகளுக்கு விலையில்லா அரிசி தந்தவர் அம்மா அவர்கள் முதியோர் உதவித்தொகையை 1000 ரூபாயாக உயர்த்தி கொடுத்தவர் அம்மா அவர்கள். தாலிக்கு தங்கம் கொடுத்து, திருமண உதவியும் கொடுத்தவர் அம்மா அவர்கள். 
 குறைக்க விலையில்லா மிக்சி, கிரைண்டர் வழங்கியவர் அம்மா அவர்கள். பெண்களின்  உணர்ந்ததால் தான் இந்த திட்டத்தை அம்மா அவர்கள் வழங்கி கொண்டிருக்கிறார்கள்.
  இதுவரை 1 கோடி பேருக்கு மிக்சி கிரைண்டர் வழங்கப்பட்டு விட்டது. இனி வரும் 2 ஆண்டுகளில் மீதமிருப்பவர்களுக்கும் வழங்கப்படும்.அம்மா அவர்களின் திட்டங்கள் மக்களுக்கு நேரடியாக பயன்படும் திட்டங்கள். கிராமப்புற பெண்களுக்கு விலையில்லா ஆடுகள், கறவை மாடுகள் வழங்கும் திட்டம். மேலும் சூரிய மின்சக்தியுடன் பசுமை வீடுகள் திட்டம். 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1000  சிகிச்சையளிக்க கூடிய விரிவுபடுத்தப்பட்ட மருத்துவ காப்பீட்டு திட்டம் அம்மா அவர்கள் வழங்குகிறார். மக்கள் பணம் மக்களுக்கே செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் அம்மா அவர்கள் ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறார்.
 அரிசி விலையை கட்டுப்படுத்த கூட்டுறவு துறை மூலம் 20 ரூபாய்க்கு அரசி வழங்கிறார் அம்மா. சென்னையில் காய்கறிகளை விவசாயிகளிடம் கொள்முதல் செய்து மக்களுக்கு எளிதில் கிடைக்கும் வண்ணம் செய்துள்ளார். ஒவ்வொரு மாநகராட்சியிலும் 10 அம்மா உணவகங்கள் திறந்துள்ளார். சென்னையில் 200 அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. திருப்பூர் மாநகரில் 10 இடங்களில் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் எங்குமே ஒரு ரூபாய்க்கு இட்லி கிடைக்காது. ஆனால் அம்மா அவர்கள் வழங்குகிறார். பேருந்தில் செல்பவ்வர்களுக்காக 10 ரூபாய்க்கு அம்மா குடிநீர் வழங்குகிறார். மலிவு விலை உப்பு வழங்குகிறார். தேர்தல் நேரத்தில் சொன்ன அத்தனை வாக்குறுதிகளையும் அம்மா அவர்கள் நிறைவேற்றி இருக்கிறார்கள். பெண்களுக்காக பல திட்டங்களை அளிப்பவர் அம்மா.  சீமந்தம் நடத்தும் திட்டம் கூட அம்மா அவர்கள் நடத்துகிறார். அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஏழை எளிய மக்களின் குழந்தைகளுக்காக 'அம்மா கிட' அறிவித்து அதை வழங்குகிறார். அந்த 'கிட'டில் குழந்தைக்கு தேவையான 15 பொருட்களை பூரட்சித்தலைவி அம்மா வழங்குகிறார். எந்த அளவுக்கு மக்களை நேசித்தால் அம்மா இவ்வளவு திட்டங்களை வழங்குவார் என்பதை நீங்கள்  .உணர வேண்டும்.
 தமிழகத்தில் பணம் இல்லாமல் யாரும் படிப்பை நிறுத்த கூடாது என்பதால்  பேனா.பென்சில், புத்தகம் உள்பட 14 பொருட்களை அம்மா அவர்கள் வழங்குகிறார். பிளஸ் 1 பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கிறார். தாய் தந்தை இழந்த குழந்தைகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்து. விலையில்லா சைக்கிள், மடிக்கணினி வழங்கி ஏழை எளிய குழந்தைகளும்  வேண்டும் என்பதை செயல்படுத்தி வருகிறார். 
மக்களுக்கு திட்டங்களை கொடுக்க கூடிய அரசு அ.தி.மு.க., அரசு. இத்தனை திட்டங்களை வழங்கியதால் தான் மக்கள் அம்மா அவர்களுக்கு நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை தந்திருக்கிறார்.
தி.மு.க., 10 ஆண்டு காலம் மத்திய ஆட்சியில் பங்கெடுத்தும் கூட தமிழர் பிரச்சினைகளை தீர்க்க முடியவில்லை. அம்மா அவர்கள் தனி ஒரு மனிதராக நின்று காவேரி பிரச்சினையில் வழக்கு தொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார். முல்லை பெரியாரிலும் 142 அடியாக நீர் மட்டம் உயர்த்துவதை வழக்கு தொடுத்து வெற்றி  கண்டார்.இதற்காக மதுரையில் அம்மா அவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. ஒரு நாளைக்கு 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் மக்களை பற்றியே சிந்தித்து திட்டங்களை வழங்குவது புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசு. இந்த அரசுக்கு நீங்கள் என்றும் ஆதரவை தர வேண்டும். வருகிற 2016 தேர்தலிலும் நீங்கள் நல்லாதரவை வழங்க வேண்டும். இதன் மூலம் வருகிற  தேர்தலிலும் அம்மா அவர்கள் வெற்றி பெற்று அம்மா அவர்கள் நல்ல திட்டங்ககளை வழங்குவார்கள் 
இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
தொடர்ந்து இந்த கூட்டத்தில் பொதுமக்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது. 
இந்த கூட்ட்டத்தில் ஸ்டீபன்ராஜ், கலைமகள்  கோபால்சாமி,கண்ணப்பன், கருவம்பாளையம் மணி, அன்பகம் திருப்பதி,கே.என்.விஜயகுமார், எஸ்.ஆர்.ஜெயக்குமார்,கே.என். சுப்பிரமணியம்,பூளுவபட்டி பாலு,  தம்பி  மனோகரன்,மார்க்கெட்  சக்திவேல், உஷா ரவிக்குமார், எஸ்.பி.என். பழனிசாமி,அட்லஸ் லோகநாதன், ஏ.எஸ். கண்ணன், ராஜேஷ் கண்ணா, கண்ணபிரான், பி.கே.முத்து, ஹரிஹரசுதன், பார்த்திபன், மகாலிங்கம்,குட்டி தங்கவேல், பழனிசாமி, ராஜேந்திரன், 
கவுன்சிலர் உமா மகேஸ்வரி, ஜெயஸ்ரீ சுந்தர மூர்த்தி, பார்த்திபன்,   வசந்தி, ரவிச்சந்திரன், பூபதி,வெங்கடேசன், குமார், வெள்ளியங்கிரி,  பத்மாவதி,நாட்டுக்காவலன், கிரியான்ஸ் குமார், கோகுல், சடையப்பன், பரமர்ராஜன், கே.பி.ஜி.மகேஷ், பாபு, ஷாஜகான், பி.லோகநாதன், ஜெகதீஷ், சின்னு, ரவிக்குமார், ரத்தினகுமார், உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

படம்;

0 comments: