Monday, August 25, 2014

On Monday, August 25, 2014 by Unknown in ,    




ஏழ்மையில் உள்ள முதியோர்களுக்கு சமூகப்பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதம் தோறும் கடந்த தி.மு.க., ஆட்சியில் ரூ.500 வழங்கப்பட்டது. 2011 ல் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் இத்தொகை ரூ ஆயிரமாக உயர்த்தப்பட்டது. இதனையடுத்து பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து முதியோர் ,மற்றும் விதவைகள் அரசு சார்ந்த உதவி தொகைகளை பெற்று வந்தனர் .இந்நிலையில் உதவி தொகை பெற தகுதி இல்லாதவர்களின் பட்டியலை தயாரிக்க வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தி ஊராட்சி மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்களில் அந்த பட்டியலை ஒட்டிய அதிகாரிகள் தகுதி வாய்ந்த பயனாளிகள் பலரையும் தகுதியற்ற பட்டியலில் சேர்த்து விட்டனர் .இதனால் அதிக ஆண்டுகளாக உதவி தொகை பெற்றவர்கள் கூட தங்களை பட்டியலில் இருந்து நீக்கியது ஏன் என தெரியாமல் உள்ளனர் .மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவை சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் இது தொடர்பாக மனு அளிக்க வந்தனர் .அந்த மனுவையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பெற்றுக்கொண்டனர் .முதியோர் உதவி தொகைக்கு மட்டுமல்லாது விதவை உதவி தொகைக்கும் வேட்டு வைத்து விட்டனர் .போலியான பயனாளிகளை கண்டறிவதில் நமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை .ஆனால் உண்மையான் பயனாளிகளை களை எடுக்க நினைப்பது வேதனைக்குரியது .அரசுக்கு பல கோடி ரூபாய் செலவு ஏற்படுகிறது என்பதற்காக முதியோர்கள் விஷயத்தில் அலட்சியம் காட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாது .வருவாய் துறை அமைச்சரும் ,மாவட்ட ஆட்சியரும் இதில் தலையிட்டு தீர்வு காண வேண்டும்

0 comments: