Wednesday, September 03, 2014

On Wednesday, September 03, 2014 by farook press in ,    
உடுமலை உழவர் சந்தையில் ஆகஸ்டு மாதம் ரூ.1½ கோடிக்கு காய்கறிகள் விற்பனையானது.
உடுமலை கபூர்கான் வீதியில் உள்ள உழவர் சந்தையில் கடந்த ஆகஸ்டு மாதம் 5 லட்சத்து 92 ஆயிரத்து 205 கிலோ காய்கறிகள் விற்பனைக்கு வந்திருந்தது. 2, 196 விவசாயிகள் கொண்டு வந்திருந்த இந்த காய்கறிகள் மொத்தம் ரூ.1 கோடியே 50 லட்சத்து 31ஆயிரத்து 500–க்கு விற்பனையானது. இந்த காய்கறிகளை 84 ஆயிரத்து 77 நுகர்வோர் (பொது மக்கள்) வாங்கி பயனடைந்தனர்.
கடந்த ஜூலை மாதம் 2,162 விவசாயிகள் கொண்டு வந்திருந்த 5 லட்சத்து 54 ஆயிரத்து 615 கிலோ காய்கறிகள் ரூ.1 கோடியே 60 லட்சத்து 58 ஆயிரத்து 265–க்கு விற்பனையாகியிருந்தது. இதை 79 ஆயிரத்து 302 நுகர்வோர் வாங்கி பயனடைந்தனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தை விட ஜூலை மாதம் காய்கறிகளின் வரத்து குறைவாக இருந்தும் விற்பனை விலை அதிகமாக இருந்தது. ஜூலை மாதத்தை விட ஆகஸ்ட் மாதம் காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்திருந்ததால் விற்பனை தொகையும் குறைவானது.
உடுமலை உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.6 முதல் ரூ.8 வரைக்கும், கத்தரிக்காய் ரூ. 16 முதல் ரூ.24 வரைக்கும், வெண்டைக்காய் ரூ.16 முதல் ரூ.20 வரைக்கும், அவரைக்காய் ரூ.30–க்கும், புடலங்காய் ரூ.16–க்கும், பீர்க்கங்காய் ரூ. 12 முதல் 15 வரைக்கும், சுரைக்காய் ரூ. 8 முதல் 10 வரைக்கும், பாகற்காய் ரூ.22 முதல் ரூ.24 வரைக்கும், பூசணிக்காய் ரூ.12–க்கும், சம்பாபச்சை மிளகாய் ரூ. 18 க்கும், குண்டு பச்சை மிளகாய் ரூ.24 முதல் ரூ.26 வரைக்கும் விற்பனையானது.
சின்ன வெங்காயம் ரூ.30 முதல் ரூ.34 வரைக்கும், பெரிய வெங்காயம் ரூ.26 முதல் ரூ.32 வரைக்கும், முருங்கைக்காய் ரூ.16 முதல் ரூ.18 வரைக்கும், உருளைகிழங்கு ரூ.38–க்கும், கேரட் ரூ.48 முதல் ரூ.50 வரைக்கும், பீட்ரூட் ரூ.12 முதல் ரூ.14 வரைக்கும்,முட்டைக்கோஸ் ரூ.16–க்கும், முள்ளங்கி ரூ.10 முதல் ரூ.12வரைக்கும், சாதா பீன்ஸ் ரூ.40–க்கும், புஸ்பீன்ஸ் ரூ. 50க்கும், பழைய இஞ்சி ரூ.100–க்கும், புதிய இஞ்சி ரூ.60–க்கும் விற்பனையானது.

0 comments: